பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாப்பிள்ளைத் தேர்வு 'ஏன் பிறந்தாய் மகளே என்று பிறப்பித்த காலத்தில் நினைக்காது போனாலும், இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, இப்படி அமைச்சர் முதல் ஆண்டிவரை நினைக்கும் இந்தக் காலக்கட்டத்தில், இதோ இதே நாளில், குட்டாம்பட்டியில் வாழும் ராமலிங்கம் மட்டும், இன்னொரு பெண்ணையும் பெறாமல் போனோமே என்று வருத்தப்பட்டார். அவரது பறட்டைத் தலையில், தேய்ப்பதற்காக சதைக் குவளை மாதிரியான அவர் கையில் தேங்காய் எண்ணெய் பாட்டிவைச் சாய்த்துக் கவிழ்த்த தேனம்மா அருகில் நிற்பதையோ, அவர்கையில் எண்ணெய் ஊத்தியதையோ கவனிக்காமல், மனிதர் குத்துக் கல்லாய் நின்றார். இன்னொரு நாளாக இருந்தால், கையில் அதிகமாகப் பெருக்கெடுத்த எண்ணெயைப் பார்த்துவிட்டு, 'இவ்வளவு எண்ணெய் தேய்த்தால் உருப்பட்டாப் போல்தான்' என்று மனைவியை கத்தி முடித்திருப்பார். ஆனால் இப்போதோ, துண்டை எடுத்து விசிறியாக்கிய படியே நின்றார். தேனம்மா, தனது தலையில் எண்ணெய் தடவி விடுவதையோ அப்படித் தடவியதில் அவரது முள் முடியில் அவளது கை சிக்கிக் கொண்டு, முடியை இழுத்த இழுப்பில் ஏற்பட்ட வலி யையோ, உணராமல் நின்றபடியே நின்றார். ராமலிங்கம், எந்த மனிதனுக்கும், தன்னைப்போல் அவனா, இவனா என்ற பிரச்சினை வரக்கூடாது என்று நினைத்துக் கொண்டார். இந்த பிரச்சினைக்கு தீர்வாக இரட்டை அதிர்ஷ்டங்கள் வந்தாலும், அவருக்கு அவை, துரதிருஷடங்களாக தெரிந்தன.