பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாப்பிள்ளைத் தேர்வு 135 இவன்களில் எவனை மகள் மலருக்குத் தேர்ந்தெடுப்பது என்பது அவருக்குப் பிரச்சனையாகிவிட்டது. இவர், தனது குலதெய்வமான கடலைமாடனிடம் பூப்போட்டுப் பார்த்தார். அந்த மாடன் முத்துவேலுக்கு வெள்ளைப் பூவைக் காட்டி, பழனிச்சாமிக்கு, டேஞ்சர் நிறப் பூவைக் காட்டிவிட்டான். அதே சமயம், மனைவி தேனம்மா தனக்குப் பிடித்த காளியம்மாளிடம் சீட்டு எழுதிப் போட்டாள்.அந்த ஆத்தாளோ,பழனிச்சாமிக்கு ஆமாம்போட்டு,முத்து வேலுக்கு சீல் போடுகிறாள். போதாக்குறைக்கு, கடந்த நான்கு நாட்களாக இரண்டுபயல்களுமே அவரையே பெண்ணாகநினைத்து அவர் போகுமிடமெல்லாம் அவரை சைட் அடிக்கிறார்கள். ராமலிங்கத்திற்குக் கோபம் கோபமாக வந்தது. வீட்டின் மூன்று வாசல்களைத் தாண்டி படிகளுக்குக் கதவு போல் உள்ள கொல்லைப்புற கிணற்றுச் சுவரில் சாய்ந்து நிற்கும் மலர், எதையுமே கண்டுக்காதுபோல், வலது கையால் இடது கைக்குச் சொடக்குப் போட்டுக் கொண்டிருந்தாள். அந்தப் பயல்கள் சொக்கிப்போகும் அளவுக்கு அவளிடம் என்ன இருக்கிறது என்று அவருக்குப் புரியவில்லை. அப்புறம், ஒரு தந்தைக்கு, மகளின் அழகு தெரியாது என்பதை ஒப்புக் கொண்டது போல் முகத்தைத் திருப்பினார். ஆனாலும், மலர், அம்மாவைப் போல் இரண்டு கன்னத்து எலும்புகளும் துருத்தி நிற்க'இருமுகம் காட்டாமல், தன்னைப் போல் வட்டமுகம் கொண்டதில் மகிழ்ந்துபோனார். அதே சமயம் தன்னைப் போல் சப்பிப்போன உடம்பில்லாமல், அம்மாவைப்போல் அழுத்தமான உடல்வாகுகொண்டதில் அவருக்கு ஒரு பூரிப்பு, ஆனாலும் சரியான பேக்குராண்டு இரண்டு பேரில் எவன் பிடிக்குது என்று சாடைமாடையாகச் சொல்லலாம். சொன்னால் தானே. இரண்டு பேரையுமே கட்டிக்கத் தயார் என்பது மாதிரி பார்த்தால் எப்படி! ராமலிங்கத்தின் தலையில் எண்ணெய் தேய்த்து முடித்துவிட்ட தேனம்மா, தனது புறங்கையால், அவரது கையில் எண்ணெய் பிசிறைத் தடவி விட்டபடியே சொன்னாள்: