பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 க. சமுத்திரம் "உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா? மேலத்தெரு ராக்கம்மா கல்யாணம் ஆன இந்த ஒரு வாரத்துல ஒரு நாளுகூடப் புருஷனைத் தொட விடலையாம். கேட்டால், சிகரெட் பிடிக்க தெரியாதவனெல்லாம் ஒரு ஆம்பிளையான்னு கேட்கிறாளாம். நம்ம பொண்னு கத்தப் பட்டிக்காடு." ராமலிங்கத்திற்குக் கோபம் வந்தது. கிணற்றுச் சுவரில், இன்னும் சாய்ந்தபடியே இப்போது வலதுகைக்கு இடதுகையால் சொடுக்கு போட்டுக் கொண்டிருந்த மகளை, திட்டுவதற்குச் சாக்குபோக்கு பார்த்தார். "ஏழா மலரு. இங்க வா." "வாரேன்பா..." மலர், இடுப்பில் சொருகிய சேலையை பாதம்வரை படர்த்திவிட்டு, தந்தையின் பக்கம் ஓடோடிவந்தாள்.அப்பா எதற்காக கூப்பிடுகிறார் என்பது தனக்குத்'தண்ணீர்பட்டயாடு என்பதுபோல் அடுக்களைப் பக்கம் ஓடினாள். நான்கைந்து தம்ளர்களில் நல்ல டம்பளர் ஒன்றை எடுத்து, யானைக்குள் துழாவப் போனாள். பிறகு, அந்தடம்ளரை அப்படியேவைத்துவிட்டு, கண்ணாம்புகரைபட்ட, தன் கையைக் கழுவிவிட்டு, ஒரு செம்யை எடுத்து நீர் மொண்டாள். அப்பாவுக்காக அவ்வளவு கத்தம். இவ்வளவுக்கும் அண்ணன் தண்ணீர் கேட்டால் தான் குடித்து வைத்த எச்சில் தண்ணிரைக் கொடுப்பவள்தான். செம்பை நீட்டிய மகளிடம் அப்பாகத்தினார். "இந்தா. என் தலையிலே ஊத்து. அப்பவாவது பித்தம் தெளியட்டும்.” மலர், கவலைப்படவில்லை. கண்ணிர் மல்க வில்லை, லேசாகச் சிரித்துக் கொண்டாள். "தண்ணீர் வரவர உப்புக் கரிக்குதுப்பா, இனிமே தெருக்குழாயிலதான் குடிக்கத் தண்ணீர்