பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாப்பிள்ளைத் தேர்வு 137 பிடிக்கனும்,' என்று சொல்லிவிட்டு, சர்வசாதாரணமாகப் போய்விட்ாள். கண்ணை மூடியபடியே, வாய் வழியாக மூச்சுவிட்ட ராமலிங்கம்,வீட்டுக்கு வெளியே,தெருவில் கேட்டபேச்சுச்சத்தத்தைக் கேட்டு நிமிர்ந்தார். அது தேனம்மாவுக்குச் சாதா சத்தமாகவும், இவருக்கு அசரீரி குரலாகவும் ஒலித்திருக்க வேண்டும். சத்தம் இதுதான். "தீமிதி விழா இல்லாத திரெளபதியம்மன் கொடையா?” அந்தத் தெருப் பேச்சு, ராமலிங்கத்திற்கு திருப்பேச்சாய் ஒலித்தது. மார்பை நிமிர்த்தி, தலையைத் துக்கித் தன்னையே எக்காளமாகப் பார்த்துக் கொண்டார். மனைவியிடம் முகம் கொடுத்து, அதே சமயம், மகளிடம் பேசுவதுபோல் பேசினார். 'ரெண்டு பயலையும் தீ மிதிக்க வைக்கப் போறேன். எவன் தேறுறானோ அவனுக்கே நம்ம மலரு” தேனம்மா,விவரம்கேட்பதற்கு முன்பே,ராமலிங்கம் நடையைக் கட்டினார். நிறத்தாலும், குணத்தாலும் பழுத்துப்போன அரைக்கை சட்டை ஒட்டைகளுக்குள் இன்னும் இரண்டு கைகளைத் திணிக்கலாம். அந்தத் தொளதொளப்புச் சட்டையோடு, வடக்குத் தெருவைத் தாண்டி, அது சங்கமமாகும் வண்டிப்பாதையில் நடந்து, அந்தப் பாதை அஸ்தமித்த அல்லது விஸ்வரூபம் எடுத்த கப்பிச்சாலையில் நடந்தார். இருபுறமும் உள்ள சிற்றுண்டி, சைக்கிள், பலசரக்கு, பெட்டிக்கடைகளை ஒப்புக்குகூடப் பார்க்காமல், முத்துவேலின் உரக்கடை முன்னால் போய் நின்றார். அந்தக் கடையில் வேக வைத்த இரும்புக்கு மேக்கப் போட்டதுபோல், பல்வேறு வகையான கருவிகள், கடையின் பின்பக்கச் சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தார். அவரைப் பார்த்ததும், அவர்பக்கத்தில் மலரே நிற்பதுபோலபாவித்துக்கொண்டு, முத்துவேல். ஒடிவந்தான்.