பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 க. சமுத்திரம் "மாமா! உப்புத் தண்ணீரை நல்லாதண்ணியாமாத்துறதுக்கு ஒரு மிஷின் வந்திருக்கு வாங்கிக்கிறிங்களா?” ராமலிங்கத்தின் நெற்றி, நரம்புக் கோடுகளாயின. 'என் வீட்டு கிணத்துல உப்புத் தண்ணி இருக்குது இவனுக்கு எப்படித் தெரியும்? இதற்கு பேர்தான் ராசியோ. பொருத்தமோ. ராமலிங்கம் மகிழ்ந்து போனார். அவன் வைத்திருக்கும் டிராக்டரை வாடகைக்கு எடுக்க வந்தவர், அதைவிடச் சிறப்பான பரீட்சை நடத்தப்போவதில் மகிழ்ந்துபோனார்.இதற்குள் முத்துவேல் ராக்கெட் மாதிரி இருந்த அந்தக் கருவியைக் கொண்டு வந்து, அதன் மத்தியில் இருக்கும் பஞ்க மாதிரியான பகுதி எப்படி நீரில் இருந்து இரும்புச் சத்தையும், உப்பையும் அப்புறப்படுத்துகிறது என்று விளக்கினான். ராமலிங்கம் கேட்டார். "எவ்வளவு மாப்பிள்ளை விலை?” "விலை என்ன மாமா விலை? எடுத்துட்டுப் போங்க!” 'தாய் பிள்ளையா இருந்தாலும், வாய் வயிறு வேற இல்லயா?” 'பிறத்தியாருக்குக் கொடுக்கது மூவாயிரம் ரூபாய். உங்களுக்குக் கொடுக்கிறதுல எனக்குக் கமிஷன் வேண்டாம். இரண்டாயிரத்து ஐநூறா கொடுத்திருங்க... நானே உங்கள் வீட்டுக் கிணத்துல மாட்டித் தாரேன். ராமலிங்கம் ஆறு நூறுருபாய் நோட்டுக்களை உள்பாக்கெட்டிலிருந்து அங்கிருந்தபடியே, எண்ணிஎடுத்தார்.பிறகு அவனிடம் நீட்டினார். அவன் அதை ஒரு கையில் கருட்டாக்கிக் கொண்டு, மறுகையால் பில் போட்டான். ராமலிங்கம் பாணம் தொடுத்தார். 'இது அட்வான்ஸ். ஐநூறு ரூபாயையும் எண்ணிப் பார்த்துட்டு பில் போடுங்க மாப்பிள்ளை."