பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாப்பிள்ளைத் தேர்வு 139 முத்துவேல், அவசர அவசரமாக எண்ணிட்டு, பில்லைத் தொடர்ந்தான். எழுதியபடியே சொன்னான்: "சரியாக இருக்குது (ρ/τωry." ராமலிங்கத்திற்கு என்னவோபோல் இருந்தது. திரும்பிப் பார்க்காமலேயே ரசீதை வாங்கிக் கொண்டு நடந்தார். அப்போது முத்துவேல் வேர்க்க விறுவிறுக்க அவர் பக்கம் ஓடி வந்தான். 'என்ன மாமா இது? கூட நூறுரூபாய் அதிகமாகக் கொடுத்துட்டீங்களே. இப்படியா கொடுக்கது? இந்தாங்க மிச்ச ரூபா.” "அடடே அப்படியா சரி, அட்வான்சை அறுநூறு ரூபாயா வைச்சுக்கங்க” "வேண்டாம் மாமா. பில்லு போட்டாச்சு. கணக்குப் பிசகக் கூடாது. அது வியாபாரத்திற்கு நல்லதல்ல.” முத்துவேல், தமது எதிர்கால மாமனாரிடம் நல்லபேர் வாங்கி விட்ட பெருமிதத்தில், ஒரு சிரிப்பைச் சிந்தினான். அவரும் பதிலுக்குச் சிரித்துவிட்டு பரீட்சைப் பயணத்தைத் தொடர்ந்தார். அந்தக் கடையில் இருந்து, மேற்கொண்டு வடக்குப் பக்கமாய்த் திரும்பி, ஒரு முட்டுத் தெருவுக்கு வந்தார். இரண்டு மூலைகளையும் அடைத்த பெரிய கடை. கழுகு இறகை விரித்தது மாதிரி, இருபக்கமும் நீண்ட கிளைக்கடைகள். ஒன்றில் மஞ்சள், மசாலா, எண்ணெய், சோள, கம்பு மூட்டைகள். கடையில் ஒரே கூட்டம். பக்கத்தில் ஒர் ஒயின் கடை மூடியிருந்தது. அதன் பக்கம் நான்கைந்து 'முக வெட்டுக்காரர்களுடன் பேசிக் கொண்டிருந்த பழனிச்சாமி, ராமலிங்கத்தைப் பார்த்ததும் வேட்டியை இழுத்துப் போட்டுக் கொண்டு, அவர் முன்னால் வந்து நின்று தோப்புக் கரணம் போடப் போவதுபோல் குனிந்து கேட்டான். "ஒங்களுக்கு ஆயுக நூறு மாமா. இந்தப் பலசரக்குக் கடை வைக்கும்போதுகூட, உங்க கையால இரண்டாயிரம் ரூபாய்