பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 க. சமுத்திரம் வாங்கித்தான் வைச்சேன். ஒங்க ராசி. இன்னைக்கு இது ஒரு லட்சத்துல நிக்குது.” ராமலிங்கம் திடுக்கிட்டார். பயல், வட்டிக்குக் கொடுத்ததை சொல்லாமல் சொல்லிக் காட்டுகிறானோ. ஆனாலும் பழனிச்சாமி பேச்சைத் தொடர்ந்தான். "இப்பவும் உங்க கையால ஐநூறோ, ஆயிரமோ கொடுங்க மாமா. சாயங்காலமா கொடுத்துடுறேன். இந்த ஒயின் கடையை நடத்துன டவுன்காரங்க கட்டுப்படி ஆகல்லைன்னு என்கிட்ட விற்க வாராங்க." ராமலிங்கம் லேசாய் யோசித்தார். பிறகு உள்பையில் கைவைத்து, அங்கேயே நோட்டுக்களை எண்ணி, ஆறுநூறு ரூபாய் நோட்டுக்களை வெளியே கொண்டு வந்தார். அவற்றைச் சுருட்டி மடக்கி பழனிச்சாமியிடம் நீட்டினார். 'இந்தாங்க மாப்பிள்ளை! ஐநூறு ரூபாய். எண்ணிப் பார்த்து விட்டு அட்வான்ஸ் கொடுங்க." பழனிச்சாமி அந்த நோட்டுக்களை பயபக்தியோடு எண்ணினான். இரண்டு தடவை எண்ணினான். மூன்றாவது தடவை லேசாய்த் திரும்பி நின்று எண்ணினான். பிறகு கடைப்பயலை அதட்டியபடியே, அந்தச் சாக்கில் கடைக்குள் ஏறினான். ஏறிய வேகத்திலேயே இறங்கினான். அருகே வந்த 'முக வெட்டுக்களில் கண்வெட்டுக்காரனிடம் ஐந்து நூறு ரூபாய் நோட்டுக்களை நீட்டினான். நீட்டியபடியே மங்களம் பாடினான். "மாமாவோட கைராசியிலே, இந்த ஒயின் ஷாப் கொஞ்ச நாளிலே நானே ஒயின் தயாரிக்கிற அளவுக்குப் பெரிசாய் ஆயிடும். இல்லையா மாமா? ராமலிங்கம், தலையை ஆட்டுகிறார். அவன், பேசுகிறான்.