பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாப்பிள்ளைத் தேர்வு 14? "சாயங்காலமா நீங்க கொடுத்த ஐநூறு ரூபாயையும், வீட்டுல வந்து தாரேன் மாமா.” "உங்க பணம் வேறே என் பணம் வேறயாமாப்பிள்ளை? என் பணம்தான் ஒங்ககிட்டே நிக்கட்டுமே.” ராமலிங்கம் திரும்பித் திரும்பி நடந்தார். அப்படியும் பழனிச்சாமி, முத்துவேலைப்போல் ஒரு நூறுரூபாய் நோட்டை எடுத்துக் கொண்டு பின்னால் ஓடிவரவில்லை. ராமலிங்கத்திற்கு யார் மாப்பிள்ளை என்று இப்போது முடிவு எடுப்பதில் சிரமம் ஏற்படவில்லை. 'கமிஷன்கார முத்துவேல், உப்புச்சப்பில்லாத பயல். கணக்கு தவறக்கூடாதாம். ஒரு நூறு ரூபா நோட்டு-அதுவும் உழைக்காம வந்த பணம், அவனுக்குப் பெரிசா தெரியலன்னா என்ன பயல்? அவனுக்கு மலரைக் கொடுத்தால், கல்யாண வீட்டுலேயே ஒப்பாளி வைக்க வேண்டியதுதான்.' 'ஆனால் இந்த பழனிச்சாமியோ. சமர்த்தன். இந்திரசித். அந்த நூறு ரூபாய் நோட்டை, கல்லாப் பெட்டியிலே கள்ளத் தனமா எவ்வளவு லாகவமாகப் போட்டான்! சம்பாதிக்கணுமுன்னா இப்படில்லா சம்பாதிக்கணும். அதோடு ஒயின் க்டை வைக்கப் போறான். அந்தச் சாக்குல கள்ளச் சாராயத்த பாட்டிலுல ஏத்தப் போறான். இதனாலேயே, கொஞ்சநாளுல தலைவரா ஆயிடுவான். கல்யாணத்துல நகையோடுறமோ, நட்டு போடுறமோ, ஒரு சூட்கேஸை சீதனமாக் கொடுத்திடணும்.! வாலிபம் போனாலும், வயோதிகம் வராத ராமலிங்கம், பழனிச்சாமியின் தந்தையிடம் ஒப்புதல் கொடுக்கத் திசைமாறி நடந்தார். «» ఈ్మతి