பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ധr്കO Ur്ഖൾ 143 அரிசி குறையட்டும். அன்றாடச் செலவு ஒழியட்டும். குழந்தைக்கு வந்த காய்ச்சலும் இருக்கட்டும். எப்படியோ வாயைக்கட்டியும் வயிற்றைக் கட்டியும் குழந்தையின் துன்பத்தைக் காண முடியாமல் தவிக்கும் தாய்மையைத் தனிமைப் படுத்தியும் சமாளித்துக் கொள்ளலாம். ஆனால், இன்னொருத்தியுடன் ஒடிப் போய்விட்ட அவனைப் பற்றிச் சொல்லாமலும், அதனால் ஏற்பட்ட சோக உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளாலும் எப்படி இருக்க முடியும்? இருந்தாள். கட்டிலை மட்டுமே கட்டிக் கொண்டவள் போல், கட்டிலோடு கட்டிலாக ஒட்டிக் கிடந்த அவள், குழந்தையின் அழுகை ஒலி கேட்டதும், உள்ளத்தின் ஒலத்தை ஒடுக்கிக் கொண்டே எழுந்தாள். அந்தக் குழந்தையிடம் - அவன் கொடுத்த தனது சொந்தக் குழந்தையிடமே அவளுக்கு முதலில் வெறுப்பு ஏற்பட்டது. குழந்தைக்கு ஐந்து வயதாகியிருந்தால், இந்நேரம் அடித்திருக்கக் கூடச் செய்வாள். ஆனாலும் - கண்விழிகள் இரண்டும் கனத்ததுபோல் கண்தெரியாமல், கண் திறக்காமல், அவை பழுத்ததுபோல்செக்கச்செவேலென செவ்வரளிப் பூப்போல்,பார்த்து அடையாளம்காண முடியாதுபோனாலும், அவள் இங்கேதான் இருப்பாள் என்று அனுமான்ரித்ததுபோல் அவள் மார்பில் கைபோட்ட குழந்தையை எடுத்து மார்புடன் அனைத்துக் கொண்டாள். குழந்தையின் வாய்க்குள் பால் போனதா அல்லது கண்ணில் ஊற்றாக கழுத்தில் அருவியாக மார்பில் ஆறான கண்ணிர் போனதா என்பதைச் சொல்ல முடியாது. குழந்தையை அழுத்தமாக அணைத்துக்கொண்டே, நெஞ்சில் படர்ந்த மனப் புழுக்கத்தைத் தாய்மையால் விசிறி விடப் பார்த்தாள். முடியவில்லை. - அவளுக்குத் திருமணமாகி இரண்டு ஆண்டுகள்தான் ஆகின்றன. அரசாங்க உத்தியோகம் பார்க்கும் அவனைத்தான் கட்டுவேன் என்று அவள் ஒன்றும் அடம்பிடிக்கவில்லை.