பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144. க. சமுத்திரம் சொல்லப்போனால், மணமேடையில்தான் அவனை முதன் முதலாகப் பார்த்தாள். இவ்வளவுக்கும் பி.யூ.சி. வரைக்கும் படித்துவிட்டு பின்னர் செகண்டரி கிரேட் ஆசிரியையாகப் பயிற்சி பெற்றவள். பட்டணத்தில் போலீஸ் இலாகாவில் வேலை பார்த்த அண்ணன்தான், தங்கை நாட்டுப்புறமாக இருக்கக் கூடாது என்று நினைத்து இவனைக் கொண்டுவந்தான். திருமணமான பிறகுதான், அப்பாவின், ஆஸ்திக்காக, இவளை அவன் கட்டிக் கொண்டாலும், இன்னொருத்தியுடன் ஏற்கெனவே 'புனிதக் காதலி'ல் அவன் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்தது. காவற்துறையில் துப்புகளைத்துலக்கும்வேலையில் இருக்கும் அவள் அண்ணனுக்கு சொந்தத் தங்கையின் எதிர்காலத்தை நிர்ணயித்ததில், அவன் கலை, கை கொடுக்கவில்லை. ஆரம்ப மாதங்களுக்குப் பிறகு அவள் எழுந்திருக்கும் முன்னாலே அவன் போய்விடுவதும், இரவில் அவள் தூங்கிய பிறகே அவன் வருவதும் வழக்கமாகிவிட்டது. அவளால் பார்க்க முடியாமல், ஒரளவு கேள்விப்பட்டு இருந்தவளை, 'இவங்க மாலதி... எங்க ஆபீஸ்ல வேலை பார்க்கிறவங்க. என்னோட பெஸ்ட் பிரண்ட் என்று சொல்லிக் கொண்டே அவன் கூட்டிவருவான் என்று அவள் நினைக்கவில்லை. ஆனாலோ - அவன் கூட்டி வந்தான். ஒரே அலுவலகத்தில் உத்தியோகம் பார்க்கும் அவள் அவளின் தாற்காலிக பியூன் உத்தியோகத்தை, நினைத்தால் பாதுகாக்கக் கூடிய அல்லது பறிக்கக்கூடிய நிலையில் உள்ள உத்தியோகத்தில் உலவும் அவன் - தன் கணவனிடம் முதலில் ஏற்பட்டிருக்கக் கூடிய பயத்தை காதலாக மாற்றியிருப்பாள் என்பதையும், உத்தியோகம் 'காயமாவதற்காக, தனகாயத்தை காயமே இது பொய்யடா’ என்ற ஏகாந்த உணர்வில் மெய்யாகவே கொடுத்திருப்பாள் என்பதையும் மனோதத்துவம் படித்த மேகலாவால் புரிந்து கொள்ள முடிந்தது.