பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 க. சமுத்திரம் 'நீ சொல்றதுல கடைசி வார்த்தை உண்மை. என்னை அக்கான்னு சொல்றதுனால ஒனக்கு சந்தோஷமாத்தான் இருக்கும். அதனால. அவரு, ஒனக்கு ஆசை அத்தானா ஆயிடுவாரு பாரு. அந்தப் பெண், அவளை நிமிர்ந்து பார்த்தாள். ஏதோ ஒன்று மனதில் பட்டு நெஞ்சை அரித்துக்கொண்டே வாய்க்கு வந்தது போல், உதட்டைக் கடித்தாள். தலையை குனிந்து கொண்டே வெளியேறினாள். ஆனால், அவன் இரவில் தலையை நிமிர்த்தி கொண்டே வந்தான். நானும் அவளும் உயிருக்குயிராய் இருக்கோம். ஒனக்கு முன்னால அவள் எனக்குப் பழக்கமானவள். நீ அவளை வீட்டை விட்டுத் துரத்துவது, என்னைத் துரத்துவது மாதிரி என்று சொன்னான். என்றாலும், அவன் நாகரீகமானவன் வீட்டு நடப்பு வெளியாரை வரவழைக்கும் அளவுக்கு விரசமாகக் கூடாது என்ற நாகரீகத்தைத் தெரிந்து வைத்திருப்பவன். மேகலாவை அடிக்கவில்லை. அவள் நகை நட்டுக்களைக் கேட்கவில்லை. தன் பெட்டி படுக்கைகளை எடுத்துக்கொண்டு, இரவு பத்து மணிக்குப் போனவன், போனவன்தான். அழுது வீங்கிப்போய், முகத்தின் அத்தனை பகுதியும் நீர்சொரியும் கண்களாய் மாறினவள்போல் இரவைக் கழித்த மேகலா, கணவன் தனக்காக வரவில்லையானாலும் தன் குழந்தையைப் பார்க்கவாவது வருவான் என்று நினைத்தாள். அவன் வரவாகவில்லை. செலவாகி விட்டான். வீட்டுக் கதவு பயங்கரமாகத் தட்டப்பட்டது. மேகலா குழந்தையைத் தோளில் போட்டுக் கொண்டே முன்னறைக்கு வந்து கதவைத் திறந்தாள். அண்ணனை மெளனமாக வெறித்துப் பார்த்தாள். அவன் பொரிந்து தள்ளினான். ஆமாம்; தெரியாமத்தான் கேக்குறேன். என்னையும் ஒன் புருஷன் மாதிரி புறம்போக்குன்னு நினைச்சியா? என் கிட்ட ஒரு