பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

UNéᏬ UfᎢ6aᏧᏊ 147 வார்த்தை சொல்லல. சரி, அண்ணன்னு சொல்லாண்டாம். ஒரு போலீஸ்காரன், என்கிற முறையிலாவது சொல்லலாம். இல்லியா? கொடுரமான மெளனம். சொல்லாமல் கொல்லும் மெளனம். 'நீ கொண்டு வந்த மாப்பிள்ளையைப் பார்த்தியா என்று கேளாமல் கேட்பது போன்ற மெளனம். "ஆல் ரைட் அந்தப் பயலை ஒன் காலுல விழுந்து மன்னிப்புக் கேட்க வைக்கிறேனா இல்லியான்னு பாரு, இன்னைக்கு ராத்திரிக்கு ஒரு வேடிக்கை நடக்கப் போவுது பாரு. ஒன் வாழ்க்கையில் குறுக்கிட்டவள் என்ன கதியாய் ஆகப் போகிறாள் பாரு! ஒன்னை நிர்க்கதியாய் விட்டுட்டுப் போனவன் என்ன கதியாய் ஆகப் போகிறான் பாரு' 'அவரை ஒன்றும் செய்யாதீங்க அண்ணா என்று நாவல் நாயகிகள்-திரைநாயகிகள் போல் பேசாத மெளனம்.தலைக்கு மேல் போனது சாணானால் என்ன. முழமானால் என்ன என்கின்ற வானளாவிய மெளனம். 'சாப்பிட்டியா? செலவுக்குப் பணம் இருக்கா? ஏதாவது வாங்கிட்டு வரட்டுமா? இல்ல என் வீட்டுக்கு வாரீயா? தலையைக்கூட ஆட்டாத மெளனம். தன்னையே தின்றுகொள்ளும் மெளனம். 'நீ வாய் திறந்து பேசியிருந்தால் இப்படி ஆயிருக்காதே. இன்னுங்கூட, அவனை விட்டுக் கொடுக்க ஒனக்கு மனசு வருதா? மெளனம் விட்டுக் கொடுத்தது. குழந்தை தோளில் இருக்கிற உணர்வு இல்லாமலே அண்ணனின் கையைப் பற்றி'என்னைக்கைவிட்டுவிடாதே என்று சொல்லாமல் சொல்லி, அவன் தோளில் முகந்தேய்த்து விம்மினாள். நீர் தேங்கிய அண்ணனின் கண்களில் கொதித்த நீர் தன் தலையில் 11