பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவேறு கண்கள் டிரைவர், அந்தக் காரின் டிக்கியைத் திறந்து, மூட்டை முடிச்சுக்களையும் ஒரு மூங்கில் கூடையையும் கீழே இறக்கிக் கொண்டிருந்தபோது, காருக்குள் இருந்த மேகநாதன், அருகேயிருந்த அம்மாவை அனைத்துப் பிடித்தபடி கீழே இறக்கிவிட்டார். பாண்டியம்மாள், முட்டிக் கால்கள் வரை கருண்ட சேலையை சற்றே குனிந்து பாதங்கள்வரை பரப்பிவிட்டாள். பால்கனியில் சத்தம் கேட்டு, அங்கே சிரித்துக்கொண்டு நின்ற மருமகளைப் பார்த்துப் பதிலுக்குச் சிரித்துவிட்டு ஏதோ பேசப் போனாள். அதற்குள் மேகநாதன் கேட்டுவிட்டார். "வீடு நல்லா இருக்குதாம்மா..? நானே பிளான்போட்டு கட்டினேன். காண்ட்ராக்டர்கிட்ட விடாமல் வேலையாட்கள வைச்சுக் கட்டின வீடும்மா. வீடு எப்படிம்மா இருக்கு? நல்லா இல்லியோ?” பாண்டியம்மாள், மகன் சொன்னதைக் காதில் வாங்கிக் கொண்டே, அந்த வீட்டை வெளியே நின்றபடியே ஒட்டு மொத்தமாகப் பார்த்துவிட்டு, மீண்டும் மகனையே பார்த்தாள். பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது எப்படி பேசுவானோ, அப்படிதான் இப்பவும், பேகறான். பரீட்சை முடிவுகள் வெளியானதும், ஒடோடி வந்து தீமூடடிக் குழல் மாதிரி கையில் கருட்டி வைத்திருக்கும் பரீட்சைக் பேப்பர்களை அகலமாக்கியபடியே"எம்மாநான் கணக்குல தொண்ணுத்தளுகம்மா. விஞ்ஞானத்துல எண்பதும்மா.. என்று இதே மகன், இதேமாதிரி கண்களை மேல்நோக்கி, விழிகள் முட்டநிமிர்த்தி