பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. க. சமுத்திரம் “சீ... வாயை மூடுடி. தெருவில ஆட்கள் போறது வாரது தெரியாமல் தின்னுற பாரு. மாடு திங்கற மாதிரி.” "நான் மாடுதான். ஹோலி கெள. நீங்கள் அசல் எருமை." "ஏங்க உங்களத்தான். இவள் கத்தலப் பாத்தீங்களா? உங்களுக்கு நான் எவ்வளவு சொன்னாலும் காதுல ஏற மாட்டேங்குது. இந்த வலிப்புக்காரியை எப்ப டாக்டர்கிட்டக் கூட்டிட்டுப் போகப் போறlங்க...?” "உங்களுக்குத்தான் பைத்தியம். இதோ நிக்கானே இந்த அமுதனும்தான் பைத்தியம்." அமுதன், ஆனந்தியைப் பதிலுக்குத் திட்டலாமா அல்லது தீட்டலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, மேகநாதன் அம்மாவைத் தாங்கிக் பிடித்தபடியே முறையிட்டார். 'இந்த மூணு பேரும் என்னைப் படுத்துற பாட்டை பாரும்மா. நீயாவது இவங்களுக்கு கொஞ்சம் சொல்லும்மா...” பாண்டியம்மாள், அந்தக் குடும்பத்துச் சண்டையை லேசாய் ரசித்தபடியே, மகனின் கையைப் பிடித்துக்கொண்டு, உள்ளே போனாள். அந்த வீட்டின் உட்பகுதியை சுற்றும் முற்றும் பார்த்தாள். அதற்கு மார்க்குப் போடவே தனக்கு தகுதி இல்லை என்பதுபோல மலைத்து நின்றாள். கடைந்தெடுத்த தேக்கு சோபாவில் போடப்பட்ட மெத்தை இருக்கைகளை நோக்கினாள். வெள்ளைக் கம்பிகளில் கருப்புக் கண்ணாடிகள் மறைத்த, மூன்று தட்டுக்களில் முதல் தட்டிலிருந்த டி.வி. செட்டையும், அதற்குமேல் அழகழகாய் இருந்த பொம்மைகளையும், கூரையில் பாளம் பாளமாய் சட்டம் போட்ட சதுரம் சதுரமான கண்ணாடி மினுமினுப்பையும் கண் பிசகாமல் பார்த்தாள். தரையில் போடப்பட்டிருந்த மெத்தை விரிப்பும், அதன் முகப்பில் மூன்றாகப் பிரிந்த இரும்புக் கிராதி அடைப்புக்களை மறைத்த நீலநிற கண்ணாடிக் கதவுகளையும் வாயகலப் பார்த்தாள். அவளுக்கு