பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவேறு கண்கள் 5 பெருமை பிடிபடவில்லை. மகனின் தலையைக் கோதிவிட்டாள். இதற்குள், மேகநாதனுக்கு ஒரு டெலிபோன். அவர் ஆங்கிலத்தில் வெளுத்துக் கட்டியதை சுவைத்தாள். 'சின்ன வயதிலும் இப்படித்தான். தத்துப்புத்துன்னு எல்லாரும் மூக்குல விரல் வைக்கும்படியா பேகவான்.” இதற்குள் மூன்று பேர் வெளியிலிருந்து வருகிறார்கள். மகன், அவர்களை உள்ளே உட்காரச் சொல்கிறார். ஆனால், அவர்களோ, உட்காருவதுபோல் நாற்காலி ஓரங்களில் குனிகிறார்கள். அவரிடம் குழைந்து குழைந்து பேசுகிறார்கள். பிறகு கையெடுத்துக் கும்பிடுகிறார்கள். பாண்டியம்மாள், கண்ணில் நீராய் வழிந்த ஆனந்தத்தை முகமெங்கும் பரப்பி விடுகிறாள். சாதிச் சான்றிதழ் வாங்குவதற்காக கர்ணத்திடம் கால்கடுக்க நடந்து, ரெவின்யூ இன்ஸ்பெக்டரின் கால்களில் கண்போட்டு தவித்த தன் மகனை, இப்போது இந்தக் கோணத்தில் பார்த்து, அந்தத் தாய் கம்பீரப்பட்டது போல் உடம்பை நிமிர்த்துகிறாள். மேகநாதன், அவளது கவனத்தைக் கலைக்கிறார். "ஏம்மா.. அந்த கான்வாஸ்ல. அதான் அந்த திரையில் போட்ட படம் பாரும்மா. அதில கதிர் அரிவாளோட இருக்கவன் நம்ம தம்பி மாதிரி இல்லை.?” பாண்டியம்மாள், மேற்குச் கவரில் தனித்துவமாய் தோன்றும், அந்தத் திரை ஓவியத்தைப் பார்க்கிறாள். நீரோடும் வாய்க்கால் வரப்போடு, ஆமணக்குச் செடிகளின் பின்னணியில், கதிர் வந்த நெற்பயிர்களின் மத்தியில் அரிவாளோடு ஒருத்தன். அழுத்தமான முண்டாகத் தலை. லேசாய் தூக்கலான சிங்கப் பற்கள். "நம்ம தம்பியக் கொண்டு வந்து அதுல நிக்கவைச்சது மாதிரி இல்லம்மா..?”