பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 க. சமுத்திரம் பாண்டியம்மாள்,பேச மறுக்கிறாள். சின்ன மகன் தாமோதரன் போலவே உள்ள அந்தப் படம், அவளுக்கு ஒரு பாடத்தை இருவேறு கோணத்தில் படித்ததுபோல் தோன்றுகிறது. ஒரே வயிற்றில் பிறந்தவர்களில் ஒருவன் காரோடும் சீரோடும் சூட்டோடும், கோட்டோடும், கால்பிடிக்க ஆளும், கைபிடிக்க சேவகனுமாய் வாழ்கிறான். அதே வயிற்றில் பிறந்த இன்னொருத்தன், கையில் தார்க் கம்போடும், உடம்பில் வெறும் பனியனோடும். பாண்டியம்மாள் இரண்டு கண்களும் இருவேறு காட்சிகளைப் பார்ப்பதுபோல் ஒன்றை ஒன்று இழுத்துக் கொள்கின்றன. அவள் தடுமாறுகிறாள். 'அய்யோ... என் கண்ணே மூத்த மகன் மேல பட்டுடும் போலிக்கே... தெய்வமே இது என்ன நினைப்பு.?” நாற்பத்தைந்து வயது மகன், பத்து வயது குழந்தைக் குரலில் பேசுகிறார். "குளிச்கட்டு பூஜைக்கு வாம்மா... உன்னை கூட்டிட்டு வந்தேன் பாரு காரு. அது போனவாரம் வாங்கினது. இன்னைக்கு ஸ்டேஷனுக்கு டிரைவரை ஏன் கூட்டிக்கிட்டு வந்தேன், தெரியுமா? நான் ஏன் ஒட்டிட்டு வரலே தெரியுமா? உன் கையால கார்ச் சாவியை வாங்கிட்டு, அப்புறமா ஒட்டணுமுன்னு தான். இருபது வருசத்துக்கு முன்னே ஸ்கூட்டருக்கு சாவி கொடுத்தே. ஒரு சின்ன விபத்துக்கூட நடக்கலம்மா...” பாண்டியம்மாள், மகனைப் பார்த்து சுரத்தில்லாமல் சிரித்தாள். ஒட்டை மாட்டு வண்டியில் வயலுக்குச் செல்லும் சின்ன மகனின் நினைவு வந்துவிட்டது. அவன் வைத்திருக்கும் ஒட்டைச் சைக்கிள் உடனே நினைவில் ஓடியது. இவன் வாங்கிக் கொடுத்ததுதான். 'பாவம், ஒரு கொடியில் பிறந்த இன்னொரு பூ இன்னும் விரியாமலே கருண்டு கிடக்குது.'