பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(UrsøÚ UrF6)J(Ö 14.9 ஏற்பட்டது. மாரல் டர்பிடுட் இவருகிட்ட கேட்டால், ஒங்களோட சம்மதத்தோட இந்தப் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கப் போறதாயும், அதுக்காக ஒங்களோட சம்மதத்தோட ஒத்திகை பார்த்ததாகவும் சொல்றார். அப்படியாம்மா? நெடிய மெளனம். பொய்க்கு விலைபோகாத மெளனம். போலீஸ் அதிகாரி அவனை மிரட்டினார். 'நீ ஒரு மனுஷனாய்யா. பெண்டாட்டிக்கு குழந்தை பிறக்கல. அதனால குழந்தை வேணுமுன்னு அவளோட து.ாண்டுதலாலேயே இந்தப் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கப் போறதாய் சவுடால் விட்டியே, இப்போ சொல்லுய்யா. இந்தப் பிள்ளை முகத்தைப் பார்த்து சொல்லுய்யா.சீ. நீ ஒரு மனுஷனா? அவன்,மனைவியைப் பரிதாபமாகப் பார்த்தான்.ஆசைநாயகி, தலையில் முக்காடு போட்டுக் கொண்டு, அப்படியும் மறையாமல் இருந்த முகத்தின் மிஞ்சிய பகுதியைக் கைகளை வைத்து மூடிக் கொண்டிருந்தாள். மேகலாவின் அண்ணன் கை முஷ்டிகளை ஒன்றுடன் ஒன்று மோதவிட்டுக் கொண்டிருந்தான். போலீஸ் அதிகாரி தீர்ப்புச் சொன்னார் : "ஆல் ரைட் இனிமேலயாவது ஒழுங்கா நடந்துக்கோ. ஒன் மச்சானோட முகத்துக்காகவும் இந்த அம்மாவுக்காகவும் விடுறோம். இல்லன்னா மவனே அஞ்க வருஷம் வாங்கிக் கொடுத்திருப்போம். கவலைப்படாதிங்கம்மா. இனிமேல் இவளை ஒங்க வழிக்கு வராமல் பார்த்துக்கிறது எங்க பொறுப்பு கோவிந்தா வரட்டுமாடா ஒன் தங்கச்சி புருஷனை ஊமைக்காயம் படும்படியா உதை. ரத்தம் வராமல் குத்து. அடியாத மாடு படியாது. அதுலயும் ஒன் மச்சான் அசல் எருமைமாடு வரட்டுமா.-ஏய், நீகெட்டகேட்டுக்கு முக்காடா. ஒனக்கு குடும்பஸ்தன் தானா அகப்பட்டான்.? நடடி நாயே!” மேகலா உள்ளே வந்து படுக்கையறைக்குள் போவதற்காக நடந்து கொண்டிருந்த கண்வனைக் கையமர்த்தி நிற்கச் செய்தாள்.