பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 க. சமுத்திரம் உணர்ந்தவள் அவள். நேர்மை என்பது காந்தம் மாதிரி. தர்மம் என்பது இரும்பு மாதிரி. காந்தம் இரும்பை இழுத்துக் கொண்டுவிடும். தர்மதேவதை அவளிடம் வந்தே ஆகவேண்டும். வேறு வழி இல்லை. ராசாத்தி, சூறையாடப்பட்ட கடையை அங்குமிங்குமாகப் பார்த்தாள். பின்னர், சேலையை இறுக்கி உடுத்துக் கொண்டாள். காலில் படர்ந்த துாசைத் தட்டிவிட்டுக் கொண்டாள். புலம்பிக் கொண்டிருந்த அம்மாக்காரியைப் பார்த்து, "ஏம்மா, புலம்புற..? ஒண்ணுங் குடி முழுவிப் பூடல. ஆகவேண்டியதப் பார்க்கலாம்." என்று நளினம் கலந்த கம்பீரத்துடன் எழுந்தாள். குமுதம், 19-5-1977 & ఈ్మ•