பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரும்புக் காந்தம் 169 கார்ப்பரேஷன் காரர்கள் வரப்போவதாகவும், அவர்களிடம், தான் வாடகை ரூபாய் இருபதுதான் கொடுப்பதாகக் கூறவேண்டும் என்றும் கூறினார். 'என்ன சாமி. நாயம். அறுபது ரூபா வாடகையை வேணுமுன்னா, அம்பதுன்னு சொல்றேன். ஒரேயடியா இருபதுன்னு சொல்றது நாயமா...? பொய் சொல்றதுக்கும் ஒரு லிமிட் வானாமா?” என்று அவள் திருப்பிக் கேட்டாள். வீட்டுக்காரர், ஒரு கை பாக்குறேன் என்று சவால் விட்டார். இரண்டு தினங்களுக்குள் அவள் கடை, இரவோடு இரவாகச் சூறையாடப்பட்டது. ஐநூறு ரூபாய் வைக்கப்பட்டிருந்த கல்லாப் பெட்டியையே காணவில்லை. பாங்க்காரர்கள், அவள் கடனைக் கட்டாமல் இருப்பதற்காக, மோசடிசெய்திருப்பதுபோல்பேசினார்கள். 'அடகடவுளே.பழயபடி காய்கறிக்கடையில் வாங்கி,கூறுபோட்டு விக்கக்கூட காக இல்லியோ...' என்று அவள் ஆத்தா ஒப்பாளி ஆனால், ராசாத்தி கலங்கவில்லை. கடந்த காலத்தை நினைத்துப் பார்த்தாள். அவள் மட்டும் சிறிது சலனப்பட்டு, கூடைகளை ஏற்றுவதற்காக, கண்டக்டரிடம் இணங்கியிருந்தால், இன்று ஒரு கைக்குழந்தையுடன் விபச்சாரியாக மாறியிருக்கலாம். காதலனுடன் சினிமாவுக்குப் போகவேண்டும் என்ற ஆசையில், அந்த செம்புக்கட்டியை வாங்கியிருந்தால், இந்நேரம் அவள் ஒரு கிரிமினல் குற்றவாளியாக மாறியிருக்கலாம். உடனடித் தேவைகளின் சபலங்களுக்கு இரையாகாமல், நேர்மையுடனும், ஒழுக்கத்துடனும் இருந்தால், சோதனைகளே சாதனைகளைக் குவிக்கும் என்பதை அனுபவப்பூர்வமாக