பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 க. சமுத்திரம் ஒருநாள், கண்ணுச்சாமியின் தொண்டர்கள் நான்குபேர், அவளைத் தொடுவது மாதிரி கற்றி நின்று கொண்டார்கள் - அவளை அவமானப்படுத்தி விடுவது என்று. அந்தச் சமயத்தில், வந்து நின்ற பஸ்வில் ஏறலாம் என்றால், அதில் பழைய கண்டக்டர்! ராசாத்தி, பல்லைக் கடித்துக்கொண்டு நின்றபோது, நல்ல வசதியோடு இருப்பதுபோல் காட்சியளித்த ஒரு பெண் வந்தாள். அந்தப் பெண்ணையும் அவர்கள் கிண்டல் செய்யத் துவங்கினார்கள். ராசாத்தியால், பொறுக்க முடியவில்லை. "ஏண்டா. கம்மனாட்டிங்களா.. என்னைத்தான் என்ன வெல்லாமோ பேகறிங்க... தலைவிதின்னு பொறுத்துக்கின்னேன். அந்த அம்மா, ஒங்கள என்னடா பண்ணுது, ஒங்க வாயில கரையான் அரிக்க." இதற்குள் அந்தப் பெண்ணின் கணவன் வந்துவிட்டான். கண்ணுச்சாமி வகையறாக்கள், காணாமல் போனார்கள். அந்தத் தம்பதியுடன், ராசாத்தியும் புதிதாக வந்த பஸ்ஸில் ஏறினாள். அந்தப் பெண்ணின் அருகில் உட்கார்ந்து, அவள் கேட்கிற கேள்விகளுக்கு எல்லாம், ராசாத்தி பதிலளித்துக் கொண்டிருந்தாள். அவர்கள் சிபாரிசில் கிடைத்த இடம் ஒன்றில், பாங்க் உதவியுடன், ராசாத்தி பெரியதாகக் காய்கறிகடை போட்டாள். அவள் தம்பி தங்கைகளும் வந்து கவனிக்கும் அளவிற்கு, கடை பெரிதாகிவிட்டது. கூறுபோட்டு விற்ற ராசாத்தி, இப்போது நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவளாகி விட்டாள். என்றாலும், சோதனை அவளை விட்டதாகத் தெரியவில்லை. அவள் கடை வைத்திருந்த கட்டிடத்தின் சொந்தக்காரர்,