பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரும்புக் காந்தம் j67 ராசாத்தியால், பேச முடியவில்லை. கண்ணுச்சாமியை அவளால் மறக்க முடியவில்லை. தேம்பித் தேம்பி அழப்போனாள். ஆகையால், "ஏய் பொண்ணு, இவன் வழக்கமா திருடுற ஒயரு, பல்பு, செம்புக் கட்டிங்கள உன்கிட்டதான் குடுக்கிறதா சொல்றான். உள்ளதைச் சொல்லு. இல்லை.” இந்தச் சமயத்தில், "இவள்தான் சாமி, என்னைத் திருடச் சொல்லித் தூண்டிவிட்டது. ரவ்வோண்டு திருடிக்கினு வந்தா, 'இம்புட்டுத்தான் முடிஞ்சுதான்னு.? கேட்பாள். இவளாலதான் சாமி கெட்டேன்..” என்றான் அவன். ராசாத்தி, விக்கித்து போனாள். கரையான் புற்றில் கரு நாகம் போன கததான். அடப்பாவி. போலீஸ்காரர், பிரமை தட்டி நின்ற ராசாத்தியை அச்சுறுத்துவதற்காக, லத்தியைத் ஒங்கியபோது, எங்கிருந்தோ வந்தார் ஒருவர். மிடுக்கான தோற்றக்காரர், பளபளப்பான சபாரிக்காரர், போலீஸ் லத்தியை பிடித்தபடியே, ஆணையிட்டார். “லத்தியை கீழே போடுமேன். நேற்று. இவன் கேஸ்ை’ பிடிக்கிறதுக்காக, இவனுக்கு 'போக்கு காட்டினேன். அந்தப் பொண்ணு, அவனுக்கு எவ்வளவோ புத்தி சொன்னாள்." கண்ணுச்சாமியை இழுத்துக் கொண்டு போனார்கள். ராசாத்தி கூடையில் அழுகிப் போயிருந்த கொய்யாப் பழம் ஒன்றை எடுத்து, வெளியே எறிந்தாள். இரண்டு மூன்று நாட்கள் கடந்தன. கண்ணுச்சாமியின் கையாட்கள் அவளைக் கலாட்டா செய்யத் துவங்கினார்கள். அவள் கடைக்குப் பக்கத்திலேயே ஒருவன் கடை போட்டுக் கொண்டு, அசிங்கமான பாடல்களை இயற்றிப் பாடினான்.