பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 க. சமுத்திரம் "எல்லா இடத்துலையும் நடக்கறதுதானமே... ஊரு உலகத்துல ருடக்கிற்தை காப்பி அடிக்கிறோம். அப்புறம். இதை.. நைஸா முந்தானைல வச்சு. வூட்டுக்கு கொண்டு போ. காத்தால கொண்டு வந்துடு.” “என்னய்யா இது..?” "செம்புக்கட்டி. போலீஸ் பாலோ பண்ணுது. குயிக்கா வாங்கு. நான் ஜகா வாங்கணும்.” "யோவ். இந்த வேலைக்கு வேற ஆளப்பாரு... நான் நல்லபடியா வாழனுமுன்னு நினைக்கிறவா." 'ராசாத்தி... இந்தத் தொழில எல்லாரும் பண்றாங்க. டயமாவுது. வாங்கிக்கோ..." - "யோவ். என்னை என்ன ஒன் பொம்மைன்னு நினைச்சுக்கினியா? மரியாதையா. நல்லபடியா நடக்கிறதா இருந்தா.. என்கிட்ட பேக. இல்லன்னா, நடையைக் கட்டு.” 'ராசாத்தி, சொல்லிட்டேன். என்னப் பகச்சி, இந்தப் பேட்டையில் நீ கடை போட முடியுமா? "நீ போறியா. இல்ல. நானே போலீஸ்ல சொல்லணுமா?" கண்ணுச்சாமி, போய்விட்டான். ராசாத்தியால், மயிலாப்பூர் பஸ்ஸில் ஏற முடியவில்லை. அப்படியே, சாலையோரத் தடுப்புச் சுவரில் சாய்ந்து கொண்டாள். கண்ணுச்சாமியும் கட்சில ஒரு கஸ்மாலந்தானா? பேஜாரான வுலகண்டா. தாலி கொண்டு வருவான்னு எதிர்பார்த்தால், அந்த புறம்போக்கு, செம்புக்கட்டியை கொண்டு வரான். என்ன பொழப்புடா நயினா. மறுநாள், கண்ணுச்சாமியை கைவிலங்கு போட்டு, ராசாத்தியிடம், இரண்டு போலீஸ்காரர்கள் இழுத்து வந்தார்கள்.