பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரும்புக் காந்தம் 165 முடியாமல் தவித்த இந்த ஆயாக்களுக்கு, ராசாத்தி பாரிஸில் கடைபோட்டது வசதியாக இருந்தது. ராசாத்தியின் இட 'ஆக்கிரமிப்பை இதர தெரு வியாபாரிகள் கண்டித்தார்கள். “ஏதோ போனா பூடுதுன்னு ஒரு நாள் இடங்கொடுத்தோம். நீ என்னாமே. பெர்மனண்டா ஆயிட்டே." என்று சொல்லி, ஒரு நடுத்தரப்பெண், அவள் கூடைகளை,தெருவில் கவிழ்க்கப் போனாள். அப்போது, பக்கத்தில் எதையெடுத்தாலும் ஒரு ரூபா கடை போட்டிருந்த கண்ணுச்சாமி, "அதுவும் புழச்சிட்டு பூட்டுமே. உன் தலையிலயா குந்துறாள்." என்றான் கம்பீரமாக ராசாத்தி, அவனை நன்றியுடன் பார்த்தாள். விரைவில், இளம் பெண் ராசாத்தியும், இருபத்தைந்தைத் தாண்டாத கண்ணுச்சாமியும், கிசுகிசு பேசத் துவங்கி விட்டார்கள். 'பவுடர் டப்பா, அத்தர் சென்ட், ஜட்டி, கைக்குட்டை, பிளாஸ்டிக் டப்பா, கூடை, பந்துகள் முதலிய சர்வதேச நிவாரணிகளை’ வைத்திருந்த கண்ணுச்சாமி, லுங்கியை ஒரு இறுக்குப் போட்டு கட்டிக் கொண்டு, கர்ச்சிப்பைக் காலருக்குள் வைத்துக்கொண்டு, சினிமாவில் 'டூயட் பாடுவதற்காகக் கதாநாயகன், காலை வைத்துக்கொண்டு நிற்பதுபோல் நிற்கும் காட்சியைப் பார்க்கப் பார்க்க, ராசாத்திக்கு உடலெல்லாம் ஆடும். விரைவில் இருவரும் 'ரெண்டாவது ஆட்டத்துக்கு போவது என்று முடிவு செய்தார்கள். ஆட்டநாள் வருவதற்கு ஒருநாள் முன்னதாக கண்ணுச்சாமி, மயிலாப்பூருக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த ராசாத்தியிடம் விரைந்து வந்தான். 'நாளிக்கி ஜோரா டிரஸ் பண்ணிக்கினு வரணும். சொல்விட்டேன்.” "எனக்குப் பயமா இருக்குய்யா. ஆத்தாக்காரிக்குத் தெரிஞ்சா உசிர விட்டுடும்.”