பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

j64. க. சமுத்திரம் முறைத்தார்கள். ராசாத்திக்கு, அடிக்கடி காறித் துப்ப வேண்டியது இருந்தது. பஸ் நிலையத்தின் அருகில் முக்காடு போட்டு முடங்கிக் கிடந்த ஒரு முதியவர் எழுந்தார். "இம்மா நேரத்துல நீ எங்கேயும் போக முடியாது. பேசாமல், அந்த ஒரத்திலே படுத்துக்க.. காலங்காத்தாலே பூடலாம்.” பத்து ஆண்டுகளுக்கு முன்னால், தான் பத்து வயதுச் சிறுமியாக இருக்கும்போது, இறந்துப்போன தன் நயினாவைப் பார்ப்பதுபோல், அவள் அந்த முதியவரைப் பார்த்தாள். அவரை ஆதரவாகப் பிடித்துக்கொண்டு அங்கேயே முடங்கினாள். ஆத்தாள், நினைப்பில் அவளுக்குத் துாக்கம் வரவில்லை. மறுநாள், காலையில் எழுந்து அவள் புறப்படப் போனபோது, வண்ணாரப்பேட்டையில் இருந்து, ஒரு ஆயா வந்தாள். நேராக அவளிடம் வந்து, 'இம்மா லாட்டையும் எவ்வளவுக்கு குடுக்கிறே" என்று கேட்டாள். ராசாத்தி, இருபத்தைந்துக்கு சொல்லி, இருபது ரூபாய்க்குக் கொடுத்தாள். அவளுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. மயிலாப்பூரில் கூறு போட்டு விற்றால், மிஞ்சி மிஞ்சித் தேறினால், ஒரு நாலு ரூபாய்தான் தேறும். இப்போ முள்ளங்கிப் பத்த மாதிரி சொளையாய்ப் பத்து ரூபாய்க் கிடச்சிட்டுது... மறுநாளும் வருவதாக ஆயா வாக்களித்தாள். ராசாத்தி, ஆத்தாக்காரியையும் தம்பி தங்கைகளையும் மயிலாப்பூரில் போய்ப் பார்த்துவிட்டு, கொத்தவால் சாவடிக்கு வந்தாள். ஆயா வாங்கின இடத்திலேயே கடையைப் போட்டாள். முன்தினம் வந்த அதே வண்ணாரப்பேட்டை ஆயா, இரண்டு ஆயாத் தோழிகளைக் கூட்டிக்கொண்டு வந்தாள். கொத்தவால் சாவடியில் ஏகப்பட்ட பாக்கி வைத்து, அங்கே தலைகாட்ட