பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரும்புக் காந்தம் 163 ராசாத்தி, வேற பஸ்ஸை எதிர்பார்த்து நின்றாள். மயிலாப்பூருக்கு போக வேண்டிய பஸ் எதுவுமே வரவில்லை. மணி பத்தைத் தாண்டிவிட்டது. ரிக்ஷாவில் ஏற்றிக்கொண்டு மயிலாப்பூர் போகலாமா என்று நினைத்தாள். கட்டாது. அவள், காத்துக் காத்து நின்றாள். மயிலாப்பூருக்குப் போகும் பஸ்ஸைப் பார்த்ததும், ராசாத்தி சேலையை இறுக்கிக் கட்டிக்கொண்டு, கொய்யாப்பழக் கூடையை எடுத்து, வெள்ளரிப் பிஞ்க கூடைமேல் வைத்து, லாவகமாக தூக்கிக்கொண்டு, பஸ்ஸிற்குள் நுழையப் போனாள். பழைய கண்டக்டர், அங்கே, நின்று கொண்டிருந்தான். ராசாத்தி, ஏறிய வழியே இறங்கினாள். கூடைகளை தனித்தனியாக இறக்கின்ாள். அதை கண்டக்டர், குதர்க்கமாகச் சிரித்துக்கொண்டே விசிலடித்தான். கடைசிப் பஸ் புறப்படத் தயாராகியது. ராசாத்தியால், அழுகையை அடக்க முடியவில்லை. ஆத்தாக்காரி, துடிச்சிக்கினு இருப்பாள். நடந்து போகலாமா. பொறுக்கிப் பசங்கமடக்கினால்..'பாழாப் போனவன் தட்டுனதுல, குறைஞ்சா பூட்டோம். வுலகமே இப்படித்தான்கீது. என்னா பண்றது. பேசமா ஏறிக்கலாமா." அவள் வருகையை எதிர்பார்ப்பதுபோல், ஸ்டார்ட்டான வண்டிக்கு விசில்கொடுக்காமலே நின்றான் கண்டக்டர். ராசாத்தி மனசைக் கல்லாக்கிக்கொண்டு, வேறு பக்கமாகத் திரும்பிக் கொண்டாள். அந்தக் கடைசிப் பஸ்ஸும் போய்விட்டது. கத்தி செய்யப்படாத தங்கம்போல, தூசி படிந்த கட்டம் போட்ட சேலைக்குள், உணர்ச்சி மயமாகத் துடித்துக் கொண்டிருந்த அவள் மேனியை, ராத்திரி மேயும் பலர், தத்தம் கண்களால் துளாவிக் கொண்டு போனார்கள். சிலர், அவள் அருகிலேயே நின்று