பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 க. சமுத்திரம் அதுக்கு ஊரக் கூட்டி ஒப்பாரி வைக்கிறியே. கூடைங்கள கீழே இறக்குமே." ராசாத்திக்கும், இது ஒரு தன்மானப் பிரச்சினை. "ஏய்யா...தெரியாம கைபடுறதுக்கும், ஒரு இதுவோடகை படுறதுக்கும் தெரியாமலா பூடும்?” "நீ அனுபவத்துல தெரிஞ்சுக்கிட்டவளாய் இருக்கலாம்.பல கையுங்கள பத்தி நல்லாத்தான் தெரிஞ்சி வச்சிருக்கே...” "யோவ். கஸ்மாலம். செருப்பு பிஞ்கடும். ஜாக்கிரதையா »o பேக. கண்டக்டர், பதிலுக்கு ஏதோ சொல்ல வாயெடுத்தான். அதற்குள், பிரயாணிகளிடையே பெரியமுணுமுணுப்பு ஏற்பட்டது. "பஸ் புறப்பட இவ்வளவு தாமதமா? எந்நேரம் வீட்டுக்குப் போய் சேருவது? கூட்டத்தில் ஒருவர், சிட்கவேஷன் லீடராகி, 'ஏய்யா பேச்சை வளத்துகினே போறிங்க... கூடைங்களே வேனுமுன்னா கீழே இறக்கிடு. உங்க சண்டை முடியுற வரைக்கும் நாங்க காத்து நிக்கனுமா? அவனவன் வீட்டுக்குப் போகாண்டாம்.” என்றார். அந்த ஆசாமியும், அவரைச் சார்ந்த பிரயாணிகளும் தனக்கு ஆதரவு கொடுப்பதாக முதலில் நினைத்து, முடிவில் ஏமாந்த ராசாத்தி, மடமடன்னு கூடைகளைக் கீழே இறக்கிவிட்டு, "இனிமேல் உன் பஸ்ஸில் ஏறினால், என் பேருராசாத்தி இல்ல. பிள்ளப் பெத்த பிறவுமா உனக்கு இந்தப் புத்தி. கஸ்மாலம்..” என்று காறித் துப்பினாள். அதற்குள் பஸ் நகர்ந்தது. "கண்ணகி சிலையை இறக்கிட்டு, உன்னை அதுல நிறுத்திட வேண்டியதுதான்” என்று சொல்லிக் கொண்டே, கண்டக்டர் 'டிக்கெட் என்றான். பயணிகள், அவன் நகைச்சுவையைச் கவைப்பதுபோல் சிரித்தார்கள்.