பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரும்புக் காந்தம் 16] கண்டக்டர், 'ஒரமா அடுக்குமே என்று சொல்லிக்கொண்டே அவள் முதுகின் ஒரத்தில் லேசாகத் தட்டினான். ராசாத்திக்கு, முதலில் அந்த ஸ்பரிசம், ஒருவித 'இதுவைக் கொடுத்தது. அவனைத் திரும்பிப் பார்த்தாள். ஒருவேளை கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொல்லப் போறானோ. 'பய வுயாபாரத்துக்கு ஒரு 'கும்புடு பூட்டுடலாம். அவள் கம்மா இருப்பதைப் பார்த்த கண்டக்டர், கொஞ்சம் 'தள்ளி வையுமே'ன்னு சொல்லிக் கொண்டே, அவளை லேசாகத் தட்டினான். அந்தச் சமயத்தில், ராஜகம்பீரத்தோடு துள்ளிக் குதித்து உட்கார்ந்த டிரைவர், கண்டக்டரைப் பாராமலே, "உன் குழந்தைக்கு இப்போ எப்படிடா இருக்கு?’ என்று சொல்லிக் கொண்டே கீரை' போட்டார். கண்டக்டர், விசிலடிக்க மறந்து, அவளைத் தள்ளிக் கொண்டே இருந்தான். பஸ் உருமலோடு சேர்ந்து, ராசாத்தியும் உருமினாள். அவள் கனவு ஒருகணம் உருவாகி, மறுகணம் சிதைந்து, 'அணு பிளப்பு போல ஆக்ரோஷமாக உருவெடுத்தது. "நானும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்துக்கினே கீறேன். பேஷண்டுக்கும் ஒரு லிமிட்டு உண்டுய்யா. நீ பாட்டுக்கு டச்சு பண்ணிக்கினே நிக்கிற. இன்னாய்யா. உன் மனகல இன்னாத்தான் நெனப்பு? அடச் சீ...” பஸ்ஸில் இப்போது ஆட்கள் அதிகமாகக் கூடிவிட்டதால், கண்டக்டருக்கு, அவள் பேச்சு, தன்மானப் பிரச்சினையாகிவிட்டது. போதாக்குறைக்கு அந்தக் கழுகுக்கண்ணன் டிரைவர்,'வூட்டுல வத்தி வச்சுடுவான். அவளைப் பயமுறுத்துவது, பல பாஸஞ்சர்களைப் பார்த்த கண்டக்டருக்குச் சிரமமாக இல்லை. 'இன்னாம்மே... பத்தினி வேடம் போடுற... எனக்கும் எபிஸ்டருங்க இருக்கத்தான் செய்யுறாங்க. கூடைங்கள தள்ளி வைம்மேன்னு சொன்னது தப்பா. தெரியாம கை பட்டுட்டுது.