பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரும்புக் காந்தம் ராசாத்தியின் உடலெல்லாம் எரிந்தது. அவன் அப்படி நடந்து கொள்வான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. கொத்தவால் சாவடியிலேயே அதிக நேரம் ஆகிவிட்டது. ஊத்துக் கோட்டையில் இருந்து வரும் லாரிக்காகக் அவள் எதிர்பார்த்து நின்றதால், நேரமாகிவிட்டது. மொத்த விலைக்கு வாங்குகிற கொய்யாப் பழத்தையும், தர்கீஸ் பழத்தையும், வெள்ளரிப் பிஞ்சுகளையும், மயிலாப்பூரில் கூறு போட்டு விற்பது அவள் 'புழப்பு: அடுத்த நாள் கோவில் விசேஷம் என்பதால், அவள் அதிகமாகவே வாங்கினாள். 'கன்னி நிலையில் இருந்த கொய்யாப்பழம் பத்து கிலோ மறுநாள் நல்லா பழுத்திடும். தர்கீஸ் பழம்,'பத்துருபா'அஞ்சிதர்கீஸிலேயே மூணுரூபா நிற்கும்;முந்நூறு வெள்ளரிப் பிஞ்சுங்க. இத்தனையையும், சைக்கிள் ரிக்ஷாவிலே ஏத்திக்கினு பாரீஸ் வந்தாள். 'இம்மாத் துட்டுதானான்’னு கேட்ட ரிக்ஷாக்காரருக்கு, ஒரு கொய்யாப்பழத்தை எடுத்து, போனஸ்ாக கடிக்கக் கொடுத்தாள். காக கேட்ட வாய்க்குள் அதை வைத்துக்கொண்டே, அவர் புறப்பட்டார். மணி இரவு ஒன்பது இருக்கும். அந்த கண்டக்டர், என்னமோ நல்லவன்தான். வழக்கமாய் அவள் கூடைகளை முணுமுணுக்காமலே ஏத்துகிறவன்தான். அந்த தைரியத்துல, அவள் புரண்ட் வழியிலே ஏறி, டிரைவர் சீட்டுக்கு அருகே, கூடைக்கள'வச்சபோது, தம்மடிச்சிக்கினு வந்த