பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்பிடி 159 துவங்கினாள். இதற்குள் அம்மாக்காரி, அவள் கையைப் பிடித்து நிறுத்திக் கொண்டே கணவரிடம் பேசினாள். "உங்க புத்திதான உங்க பொண்ணுக்கும் இருக்கும்? நீங்க. சொன்னால் சொன்னதுதான். இதுமாதிரி அவள் பிடிச்சா பிடிச்சதுதான். உங்களுக்குப் பிறந்தவள். உங்களை மாதிரி பிடிவாதமாகத்தான் இருப்பாள். உங்ககிட்ட யாரும் வலுக்கட்டாயமா எதையும் வாங்க முடியுமா? இந்த மூதேவியும் உங்கள் மாதிரியே பிறந்து தொலைச்சிருக்காள். எல்லாம் என் தலையெழுத்து.” ஏகாம்பரம், புறப்படப் போன மகளை தடுக்கவில்லைதான். அதே சமயம், அவளை இழுத்துக் கொண்டு உள்ளறைக்குள் போன மனைவியையும் தடுக்கவில்லை. அவர் சொற்பிடி, அவருக்கே பற்பிடியாகி விட்டது. இந்த அனுபவத்திற்குப் பிறகு ஏகாம்பரம், குமாஸ்தாவின் ‘டூர் ஆர்டரை ரத்து செய்வாரா அல்லது இதுவே ஒரு 'காம்ப்ளெக்ஸாகி மேலும் கடுமையாக நடந்து கொள்வாரா என்பதைப் பொறுத்துத்தான் பார்க்க வேண்டும். நாகமணி, 27-8-1980 伞 *్మ•