பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 க. சமுத்திரம் முனங்கிக் கொண்டும், தலையில் கைவைத்தாள். அம்மாக்காரியால் பொறுக்க முடியவில்லை. 'நீங்க இவ்வளவு பெரிய அரக்கனாய் இருப்பீங்கன்னு நான் நினைக்கவே இல்லை. என் பொண்ணை விட்டுடுங்க... விட்டுடுங்க.." ஏகாம்பரம், சுயநினைவு பெற்றவராய், ரமாவை விடுவித்தார். அவர் உடலெங்கும் வியர்வை. அவருக்கே கை வலித்தது. "சொல்ல மாட்டே... சொல்ல மாட்டே என்று கத்தினார். ரமாவும்"சொல்லமாட்டன்." என்று சொல்லாமல் சொல்வதுபோல் அசையாமல் இருந்தாள். ஏகாம்பாரம் தலைவிரிகோலமாக உள்ளே போனார். பத்து நிமிடம் கழித்து, ரமாவின் பெட்டி படுக்கையோடு வந்தார். "நான் பெத்த கடனுக்காக இந்த பெட்டியை எடுத்துக்கோ. இன்னையில் இருந்து நீ என் மகள் இல்லே. அய்ந்து நிமிஷம் டயம். கொடுக்கிறேன். ஒண்ணு. நடந்தத சொல்லிடு. இல்லே வீட்டை விட்டு. நட." ஐந்து நிமிடம் ஆயிற்று. ரமா பதிலளிக்கவில்லை; ஏகாம்பரம் பெட்டியை எடுத்து, வாசலுக்கு வெளியே வைத்தார். அம்மாக்காரியும் அக்காக்காரியும் கைகளைப் பிசைந்தார்கள். ஏகாம்பரம் இறுதி எச்சரிக்கை விடுத்தார். "நான் சொன்னால் சொன்னதுதான். பீச்சுக்கு யார் கூட போனேன்னு தெரிஞ்சாகணும். இல்லன்னா. நீ. இந்த வீட்ல இருக்கக் கூடாது, இரண்டில் ஒண்ணு செய்." ரமா, இரண்டில் ஒன்றை செய்ய நினைத்தவள் போல் எழுந்தாள். பாவாடை, தாவணியை தட்டி விட்டுக் கொண்டாள். வெளியேறுவதற்கு ஆயத்தமாக பெட்டியைத் துக்காமலே நடக்கத்