பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்பிடி 157 "ஏய் ரமா. நான் சொல்றது காதில விழல.? எனக்கு, என்ன நடந்தது.தன்னு தெரிஞ்சாகணும். பீச்சுக்கு யார் கூட போனே?. சொல்லு." ரமா, அசைவதாக இல்லை. அவள், தன்னையே பார்த்துக் கொண்டாள். 'சொல்லமாட்டே... ஆல்ரைட்... உன்னை சொல்ல வைக்கிறேன்.” ஏகாம்பரம் உள்ளே போனார். 'வாக்கிங் ஸ்டிக்கை' கொண்டு வந்தார். "கடைசியா ஒரு சான்ஸ் தர்றேன்.சொல்விடு. சொல்றியா. இல்லியா.” - ரமா,நகர்வதாகத் தெரியவில்லை.ஏகாம்பரம் தயங்கவில்லை. 'வாக்கிங் ஸ்டிக்கை எடுத்து, அவள் பாதத்தில் வைத்து அழுத்தினார். அழுத்தத்தை நிருத்தமால் அழுத்திக் கொண்டே இருந்தார். அம்மாக்காரிக்கு அழுகை வந்துவிட்டது. அக்காக்காரி அழுதே விட்டாள்.ஆனால்ரமா, காலைக்கூட அந்தப்பக்கம் இந்தப்பக்கம்கூட நகர்த்தவில்லை. வாக்கிங் ஸ்டிக், அவள் பாதத்தைக் குடைந்து கொண்டிருந்தாலும், அவள் பாதம்தான் அதை குடைந்து கொண்டிருப்பதுபோல் தோன்றியது. ஏகாம்பரம் பொறுமை இழந்தார். தான் ஒரு தந்தை என்கிற எண்ணம் போய், அவளிடம் எப்படியும் பதிலை வரவழைத்துவிட வேண்டும் என்ற உறுதி வலுவானது. வாக்கிங் ஸ்டிக்கை, அவள் பாதத்திலிருந்து எடுத்து, தலை முடிக்குள் விட்டார். ஸ்டிக்கை சுத்தச் சுத்த அவள் தலை தானாக சுழன்றது. அவளுக்கு நரகவலி எடுத்திருக்க வேண்டும். பாதத்திலும் ரத்தம் கொப்பளித்தது. 'விட்டுடுங்க... சொல்லிடுறேன்” என்று ரமா சொல்லவில்லை. பல்லைக் கடித்துக் கொண்டும், லேசாக