பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 க. சமுத்திரம் 'நான் கேட்டுக்கிட்டே இருக்கிறேன். நீ பாட்டுக்கு குத்துக்கல் மாதிரி நின்னா. என்னடி அர்த்தம்? சொல்லுடி. எவன் கூட. பீச்சுக்கு போனே?. பி.யு.சிக்குப் போய் ஆறு மாதங்கூட ஆகல. அதுக்குள்ள காதல் வந்துட்டோ." ரமா, கண்களை கவர்க் கடிகாரத்தில் இருந்து எடுத்து, அக்கா மீது வீசினாள். அக்காக்காரியும், தன் பங்குக்குக் கேட்டாள். "அம்மா கேக்கிறாள் பாரு. சொல்லேண்டி. இந்த வயசில பீச்க கேக்குதோ?. அப்பாவுக்குத் தெரிஞ்சா. அவ்வளவுதான். வீட்டை விட்டே துரத்திடுவார்.” "சொல்லுடி. அவருவருமுன்னால் சொல்லிடு. அவருக்குத் தெரிஞ்சா என்ன நடக்குமோ. விஷயம், அவருக்குத் தெரியாமல் இருக்கிறதுக்கு, நான் பொறுப்பு." 'எனக்குத் தெரியாமல் எதையும் வைக்க முடியாது.” ஏகாம்பரம், கோபாவேசமாக உள்ளே நுழைந்தார். டையை அவிழ்த்து துார எறிந்தார். பூட்ஸ் கால்களால் தரையை உதைத்தார். "எல்லாத்தையும். வெளியில் கேட்டுக் கொண்டுதான் நின்னேன்.ஏய்.ரமா! எனக்கு விஷயம் தெரிஞ்சாகணும். பீச்சுக்கு யார்கடட போயிருந்தே? எவ்வளவு நேரம் இருந்தே. எனக்கு இப்பவே தெரிஞ்சாகணும்.” ரமா, பதிலளிக்கவில்லை. இப்போது அம்மாவையே வெறித்துப் பார்த்தாள். தாய்க்காரி, தவியாய் தவித்தாள். குறுக்கே பேசப்போன அவளை, ஏகாம்பரம் சைகையால் தடுத்துவிட்டு, ரமாவின் கண்களையே வெறித்துப் பார்த்தார். ரமாவின் கண்கள், லேசாக கழன்று ஒரே நிலையில் நின்றன. அப்படி நின்றால், அவள் ஒரு முடிவுக்கு வந்து விட்டதாக அர்த்தம். ஏகாம்பரம் அதட்டினார்.