பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்பிடி 155 நினைப்பவர். 'உன்னை ஒழிச்சிக் கட்டுறேன், என்று வாயில் தெரிந்து வந்தாலும் சரி, தெரியாமல் வந்தாலும் சரி, அப்படிச் சொன்னதுக்காக, அதைச் செய்யாமல் விட மாட்டார். தலைமைக் குமாஸ்தா நீட்டிய ஆர்டரில் ஏகாம்பரம் கையெழுத்துப் போட்டார். குமாஸ்தாவின் நிலைமை, அவருக்கே இரக்கத்தைக் கொடுத்தது."நோ.நோ. ஒன்றைச் சொல்லிட்டா. அதை நிறைவேற்றி ஆகணும்." ஏகாம்பரம், காரில் ஏறி வீட்டிற்குப் பறந்தார். ரமா, கதவை வேகமாக தள்ளிக் கொண்டு உள்ளே வந்தபோது, அவள் அக்காள், முகத்தை ஒருபுறமாகத் திருப்பிக் கொண்டு, அவளை ஒரக்கண்ணால் பார்த்தாள். அம்மாக்காரி, அவளை எரித்து விடுவதுபோல் பார்த்துவிட்டு, நன்றாக இயங்கும் கவர்க் கடிகாரத்தைப் பார்த்தாள். மணி இரவு எட்டு. “ஏண்டி லேட்டு” "லேட்டாயிடுத்து" "நான் ஏன் லேட்டுங்கறேன். நீயும் லேட்டுங்ற... ஏண்டி இவ்வளவு லேட்டு.” "காலேஜின்னா ஆயிரம் இருக்கும். அதெல்லாம் உன்கிட்ட சொல்லணுமா..?” "காலேஜின்னாவா. பீச்கன்னாவா." ரமா, திடுக்கிட்டு அம்மாவைப் பார்த்தாள். "சொல்லுடி ஸ்பெஷல் கிளாஸ், பிராக்டிக்கல் வகுப்பு, மன்த்திலி டெஸ்ட் எல்லாம். பீச்சில்தான் நடக்குதா..?” ரமா பதிலளிக்காமல், கவர்க்கடிகாரத்தை வெறித்துப் பார்த்தாள்.