பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154. க. சமுத்திரம் தலைமைக் குமாஸ்தா போய்விட்டார். வெறுங்குமாஸ்தா, கையைக் காலை ஆட்டிக் கொண்டிருந்தான். "டோண்ட்வேஸ்ட் மை டயம். நீ இப்போ இடத்தைக் காலி பண்ணல. உன்னை பெர்மனென்டா பம்பாய்க்கு மாத்திடுவேன்” குமாஸ்தா இளைஞன் போய் விட்டான், பாத்ரூமிற்குப் போன மானேஜர் ஏகாம்பரத்திற்கு, அலுவலகப்பேச்சுக்கள் ஒரளவு கேட்டன. "நீ ஒரு அசடுடா. அவரு மூட்ல இல்ல. போகாதடான்னு சொன்னேன். கேட்டியா.” "இனிமே போனியன்னா, மவனே. பெர்மனென்டா... பம்பாய்க்கு போயிட வேண்டியதுதான். அவர், ஒண்ணு சொல்லிட்டார்னா. சொன்னதுதான். இனிமேல் அவரே நினைச்சாலும் மாற்ற மாட்டார்.” "அவர் ஒவ்வொரு பிரச்சினையையும், தன்னோட தன்மானத்துக்கு விடப்படுற சவாலாய் நினைக்கிறவரு. அவருகிட்ட பேசி. விஷயத்த பாழாக்கிட்டியே." 'அம்மாவுக்கு ஜூரம். ஒய்புக்கு டெலிவரி டயம். பசங்களுக்கு கட்டி. நான் போனால். குடும்பமே போயிடும்.” "என்ன பண்ணுறது?. ஒரு மாதம் பல்லைக் கடிச்சிக்கிட்டு போய்ட்டு வா. அவர் வைராக்கியம் வச்சா. வச்சதுதான். அவர் சொன்னால் சொன்னதுதான்.” மானேஜர் ஏகாம்பரம், சுழற்நாற்காலியில் வந்து உட்கார்ந்தார். அலுவலகப் பேச்சுக்கள், அவருக்குப் பெருமையாக இருந்தன. அவர் ஒரு 'டிஸ்ஸிபிளினேரியன். அவர் வாழ்க்கையில் சாதித்ததை நினைத்துக்கொண்டே இருக்காமல், நினைத்ததை எப்படி சாதிப்பது என்பதைப் பற்றியே