பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்பிடி அந்த குமாஸ்தாவுக்கு கெட்ட காலம். இல்லையென்றால், அந்தச் சமயத்தில், அவன் உள்ளே போயிருக்க மாட்டான். அலுவலகத்தில் நடந்த ஒரு பயங்கரமான மோசடி சம்பந்தப்பட்ட கோப்பை படித்துக் கொண்டிருந்த மானேஜர் ஏகாம்பரம், அவனைப் பார்த்ததும் "எஸ்.” என்று இழுத்தபோது, அவனுக்கு கைகால் இழுத்தன. "சார். என்னை. பம்பாய்க்கு ஒரு மாதம் டூர் அனுப்பப் போவதாகக் கேள்விப்பட்டேன். என் குடும்பமே.நோயில் கிடக்கு. அதனால்.” "அதனால். துரையை அனுப்பக் கூடாதோ? என்னமேன் நினைச்சுட்டே... யு ஆர் கோயிங்..” மானேஜர் 'பெல்லை' அழுத்த, தலைமைக் குமாஸ்தா தலைதெறிக்க வந்தார். "இவரை பம்பாய்க்கு டூர் அனுப்பற ஆர்டரை டைப் அடிங்க. இப்பவே நான் கையெழுத்துப் போட்டாகணும்." "ஸார். நாளைக்குத்தான் 'டிசைட் பண்ணப் போறதா சொன்னிங்க. டில்லியில் இருந்து கிளியரன்ஸ் கேட்கணுமுன்னு சொன்னீங்க." "சொல்றதைச் செய் மேன். பிரிங் தி ஆர்டர்’