பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 க. சமுத்திரம் கோபமாகப் பேசப் போன அண்ணனின் கையை மேகலா பிடித்துக் கொண்டு குரல் கொடுத்தாள் : 'இந்தப் பிரச்சினையை ஒன் தங்கையோட பிரச்சினையாய் நினைக்காமல் ஒரு பெண்ணோட பிரச்சனையாய் நினைத்தால் ஒனக்குக் கோபம் வராது. இந்த ஏழைப்பெண் எப்படியோ மயங்கிட்டாள். இதுக்கு அவரும் காரணம். இவளை மட்டும் தண்டிக்கிறது என்ன நியாயம்? போலீஸ் கைக்குப் போகிற இவள் நிலைமை என்னாகுமுன்னு நினைச்சுப் பார்த்தியா? தன் குஞ்சை சந்தோஷப் படுத்துறதுக்காகக் கோழிக்குஞ்சைக் கொத்திக்கிட்டுப் போற கழுகு மாதிரி பாசத்தை என்மேல கொட்டி பிரச்சினையைப் பார்க்காதே.புலி, சிறுத்தைமாதிரி துஷ்டமிருகங்களைப் பார்த்ததும், உடனே சாதுவான இதரமிருகங்களை எச்சரிக்கைப்படுத்திக் கூவும் மயில் மாதிரி பிரச்சினையைப் பாரு. என்றைக்கும் பாசத்தை உறவுக்காரங்க மேல மட்டும் வைத்தால் அந்தப் பாசம் விபரீதத்துல கொண்டுவிட்டுவிடும். இதுக்குமேலையும் இந்த மனுசனோட நான் வாழ்ந்தா, நான் ஒன் தங்கை இல்லண்ணா. சரிந்து விழுந்த மேகலாவை, கோவிந்தன், கொழுகொம்பாய் தாங்கிக் கொண்டான். குமுதம் -1978 & ృతి