பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

CJr. oO Crosó 15? இன்ஸ்பெக்டர், சொன்னபடி கம்மா இருக்க வில்லை. சகாக்களுடன் வெளியேறினார். அண்ணன்காரன், அவர்களுக்குப் பின்னால் 'ஸாரிடா, ஸாரிடா என்று சொல்லிக் கொண்டே எக்கி எக்கி நடந்து வழியனுப்பிவிட்டு கோபமாக உள்ளே வந்தான். அவள், விலக்கிய முக்காட்டை மீண்டும்போட்டுக் கொண்டு, தெரிந்த முகத்தை மூடிக்கொண்டு நின்றாள். ஆசைநாயகன் கதவுப்பக்கமாக வந்து நின்றான். மேகலா அமைதியாகப் பேசினாள் : 'வாம்மா வா, உள்ளே வாம்மா." அவள் அடிமேல் அடியெடுத்து உள்ளே வந்தாள். கதவைத் தாழ்ப்பாள் போடப்போன மேகலா, கதவருகே நின்ற கணவனை கண்களால் புலன் விசாரணை செய்துகொண்டே, கத்தினாள். 'ஒங்களுக்கு இங்கென்ன வேல? எப்போ கட்டுனவளை விட கட்டாதவளைக் பெரிசா நினைசிங்களோ, அப்பவே கட்டுன தாலி க்கு மரியாதை இல்லாமப் போயிட்டுது. கணவன் என்கிற அந்தஸ்தும் போயிட்டுது. எப்போ சொந்தக் குழந்தையை விட்டுட்டுப் போகத் துணிஞ்சீங்களோ, அப்பவே தகப்பன் என்கிற அந்தஸ்து போயிட்டுது! அதுக்கும்மேல எப்போ உங்கள நம்பின இந்தப் பெண்ணை போலீஸ் கையில விட்டுட்டு வீட்டுக்குள்ள தனியா வந்தீங்களோ, அப்பவே மனிதன் என்கிற அந்தஸ்தும் போயிட்டுது. போங்க.எனக்குத்துக்கம் வருது. நான் தாழ்ப்பாள் போடணும். உம். இதுக்கு மேலயும் நீங்க மனுஷன்னா நிற்க மாட்டீங்க? அவன் மனிதன்தானாம். மனைவியையும், மச்சானையும் கூர்ந்து பார்த்துவிட்டு, கூப்பிடுவாள், கூப்பிடுவாள்' என்று நினைத்துக்கொண்டே வெளியே போய் நின்றான். அப்புறம் காணாமல் போய்விட்டாள்.