பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் இல்லாத இரவு f73 காணப் பறப்பவனாய், மணப் பந்தலுக்குள் நுழைந்து, வீட்டுக்குள் எப்படி முன்னேறுவது என்பது தெரியாமல் தயங்கி நின்றான். பெண் வீட்டுப் பெண் ஒருத்தி வீட்டுப் படிக்கட்டில் நின்றபடியே அவனைப்பார்த்துக்கேட்டாள். அவள் சொன்ன சொல், மனைவியே அவளுக்குப் பின்னணிக் குரல் கொடுத்தது போல் கேட்டது. 'எவ்வளவு நேரமாய்ப் பெண்ணைக் காக்க வைக்கது? சீக்கிரமா 'கை நனைக்க வாங்க. அவள் பசியில் துடிக்காள்.' செல்லப்பாண்டி வகையறாக்களின் குல மரபுப்படி, புதுமணத் தம்பதிக்கு ஒரே தட்டில் உணவு பரிமாறப்படும்.மாப்பிள்ளை முதலில் பாதிச்சோற்றை சாப்பிட்டுவிட்டு, மீதியைச் சாப்பிடாமல் வைக்க வேண்டும். அதை மனைவி சாப்பிடுவாள். சாப்பிட வேண்டும். இதுதான் கை நனைப்பு. செல்லப்பாண்டி, தான் உண்ட மிச்சத்தை உண்ணப் போகும் மனைவியின் சிணுங்கலையும், மழுப்பலான சிரிப்பையும் அப்பொழுதே உருவகித்துக் கொண்டான். அந்த மயக்கத்திலேயே அப்படி நின்றான். இதற்குள் படிக்கட்டில் நின்ற பெண், சொன்னதையே மீண்டும் சொன்னாள். அந்தச் சமயத்தில் வெளித் திண்ணையில் குத்துக் காலிட்டு உட்கார்ந்திருந்த ஒரு கிழவர், 'மாப்பிள்ளை. எல்லாத்தையும் சாப்பிடாதேயும். இந்தா படுத்திருகாரு பாரும். வயிருதாரி' பெருமாளு. இவரு அவ்வளவையும் சாப்புட்டுட்டு இன்னும் கொஞ்சம்சோறுபோடுங்கன்னு சொன்னவரு. என்றார். அதுவரை தலைவிரி கோலமாகப் படுத்துக் கிடந்த அந்த வயிருதாரி, "இவரு சங்கதியை நான் சொல்லுதேன் கேளும். இவரு. கல்யாணத்துல. கொழுந்தியா ஒருத்தி இவரை ஏமாத்தறதுக்காக உருண்டையாய் இருந்தவெள்ளரிக்கத்திரிக்காயச்சோத்துல வச்சாள். இந்தமனுஷன் அதை முட்டைன்னு கடிச்சு கடிச்சுப் பாக்கி வைக்காமாச் சாப்புட்டார். இவ்வளவுக்கு அது பச்சைக் கத்திரிக்காய்... கத்தரிக்காய்க்கும் முட்டைக்கும் வித்தியாசம் தெரியாத மனுஷன்.