பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 க. சமுத்திரம் இவரு பேச்சை. நீ ஒரு பைத்தியக்காரன் கேட்டுக்கிட்டு நிக்கே பாரு' என்று சொல்லிவிட்டு மீண்டும் மணமேடையிலே தடாலென்று விழுந்து மூச்சுவிடும் பிணமானார். செல்லப்பாண்டி, சத்தம் போடாமல் சிரித்துக் கொண்டு படிக்கட்டில் ஏறியபோது, உள்ளே இருந்துவந்த ஒருவர் ஒரு செம்பு நிறையத் தண்ணிர்கொண்டுவந்துகொடுக்க, அவன், அதை எடுத்து, வீட்டின் கிழக்கு சுவர் அருகே கையலம்பி விட்டு, கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைத்தபோது, அவன் அக்காள் செல்லம்மா, கைக்குழந்தையுடன் அந்தப் பக்கம் வந்தாள். தம்பியைப் பார்த்தவுடன், தன்னையும் அறியாமலே கண்கள் கசிய, அவற்றைத் தன் குழந்தையின் தோளில் வைத்தேதேய்த்துவிட்டு,போடா.சீக்கிரமாப் போய் சாப்பிடு. ஒன் பொண்டாட்டி ஒனக்காக ஊசி முனையில ஒருகாலும், உச்சந்தலையில ஒரு காலுமாத்தவமிருக்காள். நல்லாச் சாப்பிடு. என்று சொல்லிக் கொண்டே பந்தலுக்கு அருகே போய் நின்று கொண்டாள். செல்லப்பாண்டி,போகிற அக்காளைப் பார்த்தான். கிண்டல் செய்கிறாளா. இருக்காது. அவள் அப்படிப்பட்ட டைப் இல்லை. அவள் முகம் கூட, கடுகடுப்பாய், பானையில் இருந்து பொங்கத் துடிக்கும் பால் மாதிரி கண்ணிர் நுரையுடன் இருப்பது போல் தோன்றியது. அவன், அக்காளின் அருகே சென்றான். அவளே ஏதாவது பேகவாள் என்று நினைத்தான். அவளோ, பிரியப் போன உதடுகளைக் கடித்துக் கொண்டாள். அவனே கேட்டான். "என்னக்கா ஒரு மாதிரி பேசற.” "ஒண்ணுமில்லேப்பா. நீ சாப்பிடப்போ... நாளானால் சரியாப் போயிடும்.” "நீ... இப்போ சொல்லாட்டா... இன்னைய பொழுது சரியாகாது. இது முக்கியமான நாளு என்பதையும் மறந்துடாதே." "ஒன்னுமில்லேப்பா. ஒனக்குச் சம்பந்தமில்லாத விஷயம். நீ (3cյrr.."