பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் இல்லாத இரவு $75 இதற்குள், 'மாப்பிள்ளை வாங்க என்று மாமனாரே வீட்டுக்குள் இருந்து கூப்பிட்டார். 'அக்காளிடம் அப்புறம் பேசிக் கொள்ளலாம் என்று நினைத்து, அவன் நகரப்போனபோது, அக்காள் மகள் செல்வி- பத்து வயதுச் சிறுமி, வீட்டுக்குள் இருந்து வெளியே வந்தாள். அம்மாவிடம் ரகசியம் பேசுபவள் போல், மாமனுக்கும் கேட்கும்படி கத்தினாள். 'அம்மா... பொண்ணு இன்னும் அழுதுக்கிட்டுத்தான் இருக்காள்.” செல்லப்பாண்டி, திடுக்கிட்டான். அழுகிறாளா.. ஏன்? தன் வீட்டுக்காரர்கள் அவள் மனத்தைநோகவைத்துவிட்டார்களா.."நகை சரியில்லை. தொகை சரியில்லை என்று நச்சரித்து விட்டார்களா. அதற்காக அவள் ஏன் அழனும்? நான் சொல்லுவதுதானே முக்கியம். நாலுபேர் சொல்வதா முக்கியம்? அக்காள் மகளின் விரல்களைப் பிடித்துக்கொண்டே அவன் கேட்டான். 'எதுக்கும்மா ஒன் அத்தை அழுவுறாள்?" அக்காள் அதட்டினாள். "ஏய் கிறுக்கி. இப்படி வா." செல்லப்பாண்டி, அக்காள்மகளின் கையைப்பிடித்து இழுத்து, கையலம்பிய இடத்துக்கு கூட்டிப்போனான். அக்காள் படபடத்தாள். மகளின் வாயை மூடுவதற்காக ஒடப் போனவளின் வழியை அடைப்பது மாதிரி, நான்குபேர் ஒரு பெரிய பெஞ்சை தூக்கிக் கொண்டிருந்தார்கள். அதற்குள், அந்தச் சிறுமி தாய் மாமாவிடம் ஒப்பித்துவிட்டாள். 'அதுவா. வீட்டுக்குள்ள பொண்ணு கண்ணிர் விட்டுக்கிட்டே இருந்தாள். அப்போ, அவளோட அம்மா வந்தாள். உடனே, இவள், அவளைக் கட்டிப் பிடிச்சிக்கிட்டே என்னைப் பாழுங் கிணத்துல தள்ளிட்டியேம்மா.. இந்தக் கன்னங் கரேர்