பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 க. சமுத்திரம் மாப்பிள்ளைக்காம்மா நான் காத்திருந்தேன்னு சொல்லி அழுதாள். அப்போ பார்த்து உள்ளே வந்த அம்மா "என் தம்பிக்கு என்ன குறைச்சல். அவன் கால் தூசிக்கு நீபெறுவாயான்னு கேட்டுட்டு அழுதுக்கிட்டே வெளியே வந்துட்டாள்.” செல்லப்பாண்டியின் காதுகள் தாமாக இரைந்தன. அவற்றுக்குள், காற்று புகுந்து, பலூன் மாதிரி ஏதோ ஒன்று வெடிப்பது போன்ற பேரிரைச்சல். கண்கள் அக்கினிக் குழம்பாகி, திரவமாக மாறுவது போன்ற உரு மாற்றம் அடை மழை போல், உடலெங்கும் வேர்வை. கைகள் தாமாகத் தலையைப் பிடித்துக் கொண்டன. சிறிது நேரம் வரை, தாம்பத்தியப் பேராசையில் நெகிழ்வோடு இருந்த இதயம், இப்போது ஒப்பாரி ஓசையுடன், இழவு மேளம் போல வேகமாக அடித்தது. என்புதோல் போர்த்திய அவன் யாக்கையைக் கிழித்துக் கொண்டு வெளியே வரத் துடிப்பது போன்றவேகம். மூச்க உள்ளேயும், வெளியேயும் போக முடியாமல் மூக்குக்குள்ளேயே சிறைப்பட்டது போன்ற முட்டல்... வானம் இருண்டு, தானும் இருட்டிப் போனது போன்ற பிரமை. அந்த பிரமையின் பிடியில் சிக்கிக் கொண்டே, பாம்பின் வாய்த் தவளை போல் - பாதி உடல் போன பின், 'நீ என்ன காப்பாத்துவது என்று பதுங்கி நிற்கும் பிறிதொரு தவளையைப் பார்க்கும் அந்தப் பிராணியைப் போல், அவன் அக்காளைப் பார்த்தான். அக்காள், தொலைவில் இருந்தபடியே, தன் முகத்தை கைக் குழந்தையை வைத்து மறைத்துக் கொண்டாள். இப்போது, வீட்டுக்குள்ளிருந்து நாலைந்து பேர் வெளியே வந்து, மாப்பிள்ளையைச் சுற்றி நின்றபடி, நேரம் ஆகுதுல்லா. மொதல்ல கை நனையுங்க... என்று சொல்ல, விஷயம் தெரியாமலும், தெரியப் படுத்தாமலும் பந்தக் காலைப் பிடித்துக் கொண்டு நின்ற செல்லப் பாண்டியின் தந்தை போயேண்டா. ஒனக்கு எத்தனை தடவதான் சொல்லுவாங்க... என்றார். செல்லப்பாண்டி, தந்தையின் முகத்தைப் பார்த்தான். மகனை, பட்டப் படிப்புப் படிக்க வைத்ததற்காக, கையில் பட்டை