பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் இல்லாத இரவு 177 ஏந்தாத குறையாகக் கடன் வாங்கியும், முழு வயிற்றைச் கால் வயிறாகச் சுருக்கியும், இப்போது பெருமிதமாக நின்ற பெற்றவரைப் பார்த்தான். முதல் சம்பளத்தை அனுப்பியபோது மொதல்ல. ஒனக்கு வேண்டியத வாங்கிக்கோடா. மெட்ராஸ்ல. தன்னந்தனியா என்ன பண்ணுவே. என்று சொன்ன, அந்த விதி விலக்கு மனிதரைப் பார்க்கப் பார்க்க, அவனுக்கு தன் விதி, சிறிதாகத் தெரிந்தது. தந்தைக்கு விவரம் தெரியக் கூடாது என்ற எச்சரிக்கையில், யந்திரம் போல் உள்ளே சென்றான். பெண்ணின் முகம் சிரிக்காமல், கண்கள் மட்டும் சிவந்திருந்தன. நாணத்தால் குனியவேண்டியதலை அவமானத்தால் கவிழ்ந்திருப்பது போல் தோன்றியது. இப்போதுதான் அவனுக்கே நினைவு வந்தது. தாலிகட்டும்போது தன்கையில் அவள் கண்ணிர்சொட்டு விழுந்தது. அதை அப்போது ஆனந்தக் கண்ணிராக பாவித்தான்.இப்போது அதே அந்தக் கண்ணிர்பட்டகையைத் துாக்கி, தன் கண்களைத் துடைத்துக் கொண்டான். எல்லாப் பெண்களும், பெண்மைக்கு விரோதமாக, மெளனமாக இருந்தது, அவன் உள்ளத்தில் பேரிரைச்சலை ஏற்படுத்தியது. யாரோ ஒருவரோ அல்லது ஒருத்தியோ சொல்வது அவன் காதில் கேட்டது. 'உம். உட்காருங்க..? செல்லப்பாண்டி மனைவியை ஏறிட்டுப் பார்த்தான். அவளோ, தரை பார்த்த கண்களை நிமிர்த்தவே இல்லை. திடீரென்று அவன் அமைதி கலந்த ஆக்ரோசத்தோடு சொன்னான். 'எனக்கு எச்சில் சோறு கொடுத்தும் பழக்கமில்லை. எடுத்தும் பழக்கமில்லை. நான் எச்சில் சோறும் இல்லை. பெண்ணுக்குத் தனியாச்சோறு போடுங்க.பசிச்சால் சாப்பிடட்டும்.எனக்கு இப்போ பசிக்கல. நான் அப்புறமாச் சாப்பிட்டுக்கிறேன்." செல்லப்பாண்டி, எந்த வேகத்தில் சொன்னானோ, அந்த வேகத்தில் நடந்து பந்தலுக்குச் சற்றுத் தொலைவில் போடப்பட்டிருந்த நாற்காலியில் போய், தலையில் கை வைத்து முதுகை வளைத்து,