பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 க. சமுத்திரம் முகம் கவிழ உட்கார்ந்தான்.என்னமோஏதோ என்கிறமாதிரி, உள்ளே ஆண்கள் குரலும், வெளியே பெண்கள் குரலும் அவனுக்குக்கேட்டன. அவன் தந்தை யதார்த்தமாக, கோபத்துல சாப்பிடாம இருக்க மாட்டான். அவனுக்குன்னு சில அபிப்பிராயங்கள் வச்சிருக்கறவன். அதை விட்டுக் கொடுக்கவும் மாட்டான். பிறத்தியாரைப் பிடிக்கும்படியும் சொல்ல மாட்டான். இப்போ.. என்ன வந்துட்டு மாப்பிள்ள எச்சில் சோறை. பொண்ணு சாப்பிடறது தப்புத்தான். விட்டுத் தள்ளுங்க என்று அவர் சொல்வதும் கேட்டது. உண்மைதான். ஒரு மாதிரியான, சில தனி அபிப்பிராயங்களைக் கொண்டவன்தான் அவன். கிராமத்தில் மத்திய வர்க்கத்தின் கீழ்த்தட்டில் உதித்து, முப்பது கிலோ மீட்டர் தொலைவுள்ள கல்லூரிக்குத் தினமும் ரயிலில் போய் வந்து, ரயில் பிரயாணத்தால், ஒருவித ஏகாந்த சிந்தனையை வளர்த்துக் கொண்டவன். பேண்ட்-சிலாக் மாணவ பட்டாளத்தில் வேட்டியோடு போனவன். பூட்ஸ் கால்களுக்கு இணையாக செருப்பில்லாமல் நடந்தவன். நிறத்தாலும், உடையாலும் தனித்திருப்பதையே, தனிக் கவர்ச்சியாக நினைத்த ஒரிரு கல்லூரிப் பெண்கள், அவனைக் காதலிக்க முன்வந்ததும் உண்டு.அவர்களைப் பார்த்து இவன் பின்வாங்கியதும் உண்டு. வறுமை, அவனுக்கு ஒரு காம்ப்ளெக்ஸாகாமல், அதற்கான காரணங்களை ஆராயும் வகையில், மதங்களின்போதனைகளையும், பொருளாதார சமூகநிபுணர்களின் ஆய்வுகளையும் படிக்கவைத்தது. வறுமையால் தாக்கப்படாமல், அதனை, அதன்வேர் போன்ற காரணத்தோடும், வேரடி மண்ணான காரியத்துடனும் தாக்க நினைப்பதையே சிந்தனையாய்க் கொண்ட ஒரு சிந்தனையாளனுக்குரிய இயல்புப்படி, அவன் உருவுக்கு முக்கியத்துவம் கொடுத்ததில்லை. தந்தை, இந்தப் பெண்ணை நேரில் பார்க்கும்படி, சொன்னபோதுகூட, மானுட ஜீவி அனைத்துமே அழகுதான் என்கிற மாதிரி, பெண்ணைப பார்க்க வேண்டியதில்லை என்று சொல்வி