பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 க. சமுத்திரம் அவள், இமையாது அவனைப் பார்த்தாள். முகம் தானாகச் கழித்தாலும்,காதுகள் நிமிர்ந்தன.கண்கள் விரிந்தன.கருமேகம் விலகி வெண்மதியைப் பார்த்தது போல நெஞ்சில் ஒரு கமை குறைப்பு ஏற்பட்டது. செல்லப்பாண்டி தொடர்ந்தான். "இதுக்கு நானும் ஒரு காரணமாகிவிட்டதை நினைக்கும்போது தான், நெஞ்சமே வெடிப்பது மாதிரி இருக்கு. என்ன செய்யுறது. கொஞ்சநாளைக்குப் பொறுத்துக்கோ. அப்புறம் நானே ஒரு நல்ல ஏற்பாட்டைச்செய்யுறேன்.அது ஒனக்கும் நல்லது.எனக்கும் நல்லது. சரிம்மா.. எனக்கு சிந்தனையோ துக்கமோ அதிகமாகும்போது, நான் உடனே தூங்கிடுவேன். இது என்னோடபழக்கம். சந்தோஷத்தைத் உடனே பகிர்ந்துகொள்ளணும்.துக்கத்தைச்சாவகாசமாய்ப்பகிர்ந்து கொள்ளலாம். சரி. நான் துரங்கட்டுமா... இவ்வளவுக்கும் காலேஜ்ல.எத்தனையோபெண்கள் என்னை. சரிவேண்டாம்.ஏதோ என்னுள்ளயே அறிவுக்கும் உணர்ச்சிக்கும் குத்துச் சண்டை மாதிரி ஒண்ணு நடக்கு. இன்னும் பேசினா, நீ தான் இந்தச் சண்டைக்குக் காரணமுன்னு ரெண்டும் சேர்ந்து என்னையே ஒதைக்கலாம். குட் நைட் மேடம்." செல்லப்பாண்டி, போர்வையை எடுத்து உச்சி முதல் உள்ளங்கால் வரை மூடிக்கொண்டு குப்புறப் படுத்தான். என்னதான் நடந்ததை, அறிவு ரீதியில் எடுத்துக் கொள்ளப் பார்த்தாலும், உணர்ச்சி அதை விழுங்கி, பிறகு கண்ணிராய்க் கொட்டியது. நிதானமாக மூச்சு விட்டு, விம்மைைல அடக்கியபடி, அப்படியே முடங்கினான். பிறகு, சுற்றுப்புறச் சூழல் அற்றுப் போனது போல் துக்கத்தில் அடங்கி, துாக்கத்தில் சங்கமித்தான்.