பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் இல்லாத இரவு #83 மேற்கொண்டுபேசமுடியாமல், அவன் தத்தளித்தபோது, அவள், அவனை நிமிர்ந்து பார்த்தாள். அந்தப் பார்வையில் எந்தவித குற்றவுணர்வும் இருப்பதாக இல்லை. அய்யோ, அப்படியெல்லாம் கிடையாதுங்க. என்று அழுவாள் என்று மனோ தத்துவ ரீதியில் எதிர்பார்த்து, அவன் சிறிது ஏமாற்றமடைந்தான். அதே சமயம், உண்மையை மறைக்க விரும்பாத அல்லது தெரியாத அவளின் நேர்மையில் அவன் நெகிழ்ந்தான். இப்போது புத்தரைப் போலவே பேசினான். “ஒன்மேல எனக்குக் கோபம் கிடையாது, வருத்தமும் கிடையாது. சொல்லப் போனால் பரிதாபம்தான். கல்லூரியில் பாதிவரை படிச்சவள் நீ. பல நாவல்களையும் சினிமாக்களையும் பார்த்து, வரப்போகிறவன் எப்படி இருக்கணுமுன்னு கற்பனை செய்து பார்த்திருப்பே. அருவத்தில் தோன்றிய அந்த உருவம், இந்த உருவத்தில் மோதி சிதைஞ்க போனதுக்குப் கோப்படவோ. அழவோ ஒனக்கு உரிமை உண்டு. நான் சினிமா வசனம் பேசல. சீரியஸாத்தான் பேசுறேன். ஆமாம். உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்றபடி உருவத்தையே ஒரு பொருட்டாக நினைக்காத நானே, கல்யாணச் சமயத்தில், ஒன் அழகுல மயங்குனது இயற்கைன்னா, நீ என் நிறத்துல, வெறுப்படையறதும் இயற்கை தான். ஒரு பெண் யாரைக் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வாள் என்கிற கொள்கைப்படி ஒன்னை - ஒன் விருப்பு வெறுப்பைப் பார்க்காமல், ஒன்னிடம் என்னைக்காட்டாமல், கட்டிவச்சது ஒருவித மேல் சாவணிசம்.ஆண் முதன்மை பெற்ற சமூகக்கோளாறு. ஆனால் ஒன்மேல ஒரே வருத்தம். தாலி கட்டுறதுக்கு முன்னால மாப்பிள்ளை பிடிக்கலைன்னு சொல்லியிருக்கலாம். நானே முன்னே நின்று அங்கயே இன்னொருவனை உட்கார வச்சிருப்பேன். ஆனால் இப்போ..."