பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 க. சமுத்திரம் செல்லப்பாண்டியதேச்சையாகமாடிக்குப்போனான்.அங்கே கிடந்த மெத்தைக் கட்டிவில் கண்களை மூடியபடி, துரங்காமல் கிடந்தான். எவ்வளவு நேரம் ஆகியதோ தெரியவில்லை. இரண்டு பெண்கள், அவளை அங்கே கொண்டு வந்து, அங்கேயே விட்டு விட்டுக் கதவைச் சாத்தும் சத்தம் கேட்டதும், அவன் கண்விழித்தான். ஒஹோ.முதலிரவோ. கல்லென்றாலும் கணவன் என்று மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு வந்துவிட்டாளோ. அவள், கையில் பாலோடு நின்றாள். செல்லப்பாண்டி மெள்ள எழுந்தான்.அந்த அறையின் மூலையில் தண்ணிர்ப்பானை மூடிமேலி ருந்த ஒரு எவர்சில்வர் டம்ளரை எடுத்துப் பாதிப் பாலை ஊற்றிக் கொண்டான். அவள், தயக்கத்தோடு நின்று கொண்டிந்தாள். முகம் வீங்கியிருந்தது. பிறகு டம்ளரை ஒரு முக்காலியின் வைத்துவிட்டுத் தயக்கத்தோடுநின்றாள்.செல்லப்பாண்டி,அமைதியாகப்பேசினான். "என் நண்பர்களோட முதலிரவு விவரங்கள. ஒரு கட்டம் வரைக்கும் அவங்கசொல்லக்கேட்டிருக்கேன்.எல்லாப்பயலுங்களும் ‘என்னைப் பிடிச்சிருக்கான்னு கேட்டிருக்காங்க... அதுக்கு அவளுங்க. 'இல்லாமலா கழுத்தைக் கொடுத்தேன்’னு சொல்லி இருக்காளுங்க, ஒருவேளை நானும் அப்படித்தான் கேட்டிருப்பேன். ஆனால்.” அவள் கைகளால் முகத்தை மூடிக் கொண்டாள். அவனுக்கு, அவள் அழுகையை மறைக்க பார்க்கிறாளா? அல்லது அவனது முதகத்தை பார்த்த வெறுப்பை மறைக்கப் பார்க்கிறாளா என்பது புரியவில்லை. ஒன்று புரிந்தது. நிச்சயமாக அது நாணம் இல்வை; அவன் மேலும் பேசினான். 'ஒனக்கு என்னைப் பிடிக்கலேன்னு தெரியும், கன்னங்கரேர்னு இருக்கிற என்னை."