பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் இல்லாத இரவு 181 கூனிக் குறுகியவனாய், ஒரு சாய்வு நாற்காலியில் உட்கார்ந்தான். அவள் அம்மாக்காரி, மகளைப் பார்த்து.'நீ என்ன ரதியாடி. என்று இவனைப் பார்த்துக் கொண்டே திட்டுவதிலிருந்து, அவள் மருமகனாய் ஆகியோனவனின் திருப்திக்காக திட்டுகிறாள் என்பதை புரிந்து கொண்டான். பிறகு மாமினார் அவனருகே வந்து, கைகளிரண்டையும் பிசைந்தபடி "செல்லமாய் வளர்த்தபொண்ணு. மனகல இருக்கதை மறைக்கத் தெரியாதவள்."என்றுதன்பாட்டுக்குச் சொல்லிக் கொண்டிருந்தாள். செல்லப்பாண்டிக்கு, அந்தச் சூழலே கேவலமாகத் தெரிந்தது. மாமியார்க்காளி,மகளுக்குமறைக்கத்தெரியாது என்பதற்காகத் தான் வருந்துகிறாளே தவிர அப்படிப்பட்ட ஒரு எண்ணம் வந்ததற்காக அல்ல. செல்லப்பாண்டி எழுந்து வெளியே போகப்போனான்.ஒருவர்.அவனை வழிமறித்து, உட்கார வைத்தார். அவனுக்கு எல்லாமே அசிங்கமாக தோன்றியது. ஆடுமாடுகள் கூட, விருப்பம் இருந்தால்தான் இணையும். ஆனால், இங்கே விருப்பமில்லாத ஒருத்தியையும், வெறுப்படைந்த ஒருவனையும் இணைக்கப் பார்க்கிறார்கள். இதிலிருந்து தப்ப முடியாதா...' தப்ப முடியவில்லை. இரவில் சாப்பிடத் தயங்கினான். எல்லோரும் அப்போதே சாகப்போகிறவர்கள் போல 'முகங்காட்டியதால் அவன், அவர்களின் மகிழ்ச்சிக்காக, துக்கத்தோடு சாப்பிட்டான். துக்கத்தை உண்பது போல் உண்டான். அவளோ, இன்னும் குப்புறப் படுத்துக் கிடந்தாள். எல்லோரும் அவனை விழுந்து விழுந்து உபசரிப்பதில் இருந்தார்களே தவிர, விழுந்து கிடப்பது போல் கிடந்த அவளை ஒரு பொருட்டாக நினைக்க வில்லை. செல்லப் பாண்டிக்கே அவளைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.