பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 க. சமுத்திரம் பறித்து, மகன் அமுதனிடம் கொடுக்கிறாள். அவன் அவரைப் பார்த்து அழகுக் காட்டி சிரித்தபடியே கடிக்கிறான். எல்லாரும் எதுவுமே நடக்காததுபோல் இயங்கிக் கொண்டிருந்தபோது, பாண்டியம்மாளால் இருக்க முடியவில்லை. மகனை கண்ணிர் மல்கப் பார்த்தபடியே, ஒரு இட்லியை ஒப்புக்கு எடுக்கிறாள். ஒரு கேசரி கவளத்தை கையில் வைத்தபடியே வாய்க்குள் போடாமல் உருட்டுகிறாள். வயிறு சரியில்லை என்று எழுகிறாள். மேகநாதன், அறைக்குள் போகிறார். சபாரி உடையோடு திரும்புகிறார். வரைவரையான சந்தனக்கலர். பக்கத்தில் மனைவி வந்து நிற்கிறாள். ஒரு வெள்ளைப்பட்டையை நீட்டுகிறாள். கிரிக்கெட்காரர்களின் காலில் வைத்திருப்பது மாதிரியான பட்டை அதை கழுத்திற்கு மாட்டிக்கொண்டு, மனைவி நீட்டும் ஒவ்வொரு மருந்தையும், ஒவ்வொரு குவளைத் தண்ணிரோடு வாய்க்குள் போட்டு, உள்ளே தள்ளிவிட்டபடியே மேகநாதன் அம்மாவுக்கு விளக்கம் அளிக்கிறார். "எனக்கு முதுகெலும்பு தேய்ஞ்சதுனால அடிக்கடி முதுகும் கழுத்தும் வலிக்கும். கீழே குனிஞ்சாலோ, ஸ்கூட்டர் ஒட்டினாலோ, எழுதினாலோ முதுகுப் பக்கம் பிராணனைபோறது வலி எடுக்கும். அதுக்கு இந்த கழுத்துக் கட்டு. சிலநேரம் மாரடைப் போன்னுகூட பயப்படும்படியா வலிக்கும். அப்படின்னா மாரடைப்பு எனக்கு வராதுன்னும் அர்த்தமில்லே. இதயக் குழாய்ல ஒரு ரத்தக்குழாய் அடைச்சிருக்கிறத மேலும் அடைக்கர்மல் இருக்கிறதுக்கு இந்த மருந்து ரத்தக் கொதிப்பை சரிக்கட்ட இந்த சாணிநிற மருந்து. இது நீரழிவுக்கு கோமளம் இந்த அல்சர் மருந்து எங்கே..? கிட்டத்தட்ட இப்பஎனக்குமாத்திரைகளே சாப்பாடும்மா.நீவாங்கிக்கொடுப்பியே பெப்பர்மிண்ட், வேர்கடலை மிட்டாய், கூடவே வேப்பில கசாயம். அப்படி ஆயிட்டு. ஒண்னு குறைஞ்சா போதும். படுக்கையில விழுந்திட வேண்டியதுதான்."