பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவேறு கண்கள் 9 அப்போ உல்லன் கோட்டு வாங்கிறதுக்கு வைச்சிருந்த பணத்தில், தம்பிக்கு உடம்புக்குச் சுகமில்லேன்னு, ஐநூறு ரூபாயை அனுப்பிட்னேன் பாரு. அதனால. கொட்டுற பனியில திரிஞ்சேன். அப்புறம் படுக்கையில விழுந்தேனா. கடைசியில் என்னடான்னா. குளிரை எதிர்க்கிற சக்தியை உடம்பு இழந்திட்டுதுன்னு டாக்டர் சொன்னார். அதோட, எப்போதும் வெந்நீரைத்தான் பயன்படுத்தனுமுன்னு கண்டிப்பா சொல்லிட்டாரு. தண்ணிர்ல குளிச்சேன்னுவையுங்க.. காய்ச்சல் வந்துடும்.மூக்கடைச்சுடும்.காது குடையும். ஞாபகம் இருக்காம்மா..? நம்ம தம்பி கிணத்துக்குள்ள கொழிஞ்சிச் செடியை வைச்சிட்டு வருவான். நான் தலைகீழாப் பாய்ஞ்க அதை எடுத்துட்டு வருவேன். காலம் எப்படி உடம்ப மாத்திட்டு பாரு." பாண்டியம்மாள், திடுக்கிடுகிறாள். மகனையே பார்த்துக் கொண்டு நிற்கிறாள். இப்போது எங்கேயோ உள்ள சின்ன மகன் வரவில்லை. இங்கேயே நிற்கும் பெரிய மகன் சின்னப்பிள்ளையாக நிற்பதுபோல் தோன்றுகிறது. இவளுக்கும் அந்தப் நகரத்து பிள்ளையை எடுத்து இடுப்பில் வைக்கவேண்டும் என்பதுபோல் ஒரு எண்ணம். பூஜை முடிகிறது. அவள் கார்ச்சாவியை மகனைக் கட்டிப்பிடித்து தன்னோடு சேர்த்து ஒரு ஆட்டு ஆட்டிவிட்டு கொடுக்கிறாள். பிறகு எல்லோரும், மேசைக்கு வருகிறார்கள். மாமியாரோடு சேர்ந்து உட்கார்ந்திருக்கும் மருமகள், தனது தட்டிலும் பிள்ளைகளின் தட்டுக்களிலும் மாமியார் தட்டிலும் ஊரிலிருந்து வந்த பேயன் பழங்களை வைக்கிறாள். அதிரசத்தை போடுகிறாள். வீட்டில் சமைத்த பொங்கல்... இட்லிகள்... உருக்கிவிட்ட தங்கம் மாதிரியான கேசரி. வெறும் கேழ்வரகு கூழைத் துளாவிக் கொண்டிருக்கும் மேகநாதன், மீண்டும் அந்த அதிரசத்தின் பக்கம் கையை நீட்டுகிறார். அவர் மனைவி, அந்தக் கை பற்றிய அதிரசத்தை