பக்கம்:தலைப்பாகை (சிறுகதைகள்).pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 சு. சமுத்திரம் வாங்கி வரும்போது, அந்தக் குழந்தைகள் அவன் கையை போட்டி போட்டு இழுப்பதும், மனதை இழுக்கிறது. அய்யோ.. என் பெரிய மவன் பிள்ளைகளை நான் பாவி கண்ணு போடறனே. கண்ணு போடறனே.” பாண்டியம்மாள், அதுவரை கேட்டறியாத மருமகளின் போர்க்குரல் கேட்டு திரும்புகிறாள். தன்னைத்தானே ஒரு கற்று சுற்றிக் கொள்கிறாள். மருமகள், கணவனின் கழுத்தை பிடித்து இழுத்து வளைத்து, வாயிலிருக்கும் அதிரசத்தை எடுத்து எறிகிறாள். கையிலிருக்கும் ஏழிலைக் கிழங்கை தட்டிப் பறித்து, சிறிது விலகி நின்று, அவர் கால் மேலேயே கோபமாக வீசுகிறாள். அவளை அதட்டப்போவதுபோல், உதடுகளை குதப்பிய மாமியாருக்கு, விளக்கம் சொல்கிறாள். "இவருக்கு ரத்தக் கொதிப்பு இருக்கு. எப்படி ஏழிலைக் கிழங்கு சாப்பிடலாம்? நீரிழவு இருக்கு... எப்படி அதிரசம் சாப்பிடலாம்? கண்டதைத் தின்கிறது. அப்புறம் கை கால் வீங்கிக் கிடக்கிறது. உங்க பிள்ளைகிட்ட கொஞ்சம் சொல்லி வையுங்க..” மருமகள், தன்னையே ஒரு அப்பீலாக நினைத்தாலும், பாண்டியம்மாளுக்கு அவளிடம் சண்டை போடவேண்டும்போல் தோன்றுகிறது. அதற்குள், மருமகளே அவளைக் குளியறைக்குள் கூட்டிப்போகப் போனபோது, மேகநாதன், "வெந்நீர் தயாரா. முதல்ல நான் குளிச்சிடறேன். அப்புறம் அம்மா குளிப்பாங்க... இல்லாட்டா வெந்நீர் ஆறிடும் பாரு...” என்கிறார். பாண்டியம்மாள், ஆச்சிரியம் தாங்க முடியாமல், மகனைப் பார்த்துக் கேட்டாள். "எதுக்குப்பா. சுட்டெரிக்கிற வெயிலுல வெந்நீர்வ குளிக்கப் போறே.? "ஒ. அதுவாம்மா. அது இருபது வருசமா நடக்கிற பெரிய கதை. டெல்லியில நான் முதல்ல வேலையில சேர்ந்தேன் பாரு.